ரி-20 உலகக் கிண்ணம்: இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு மேலதிகமாக 5000 ஆசனங்கள்!

dharamsala-stadium indiaதர்மசலா: இந்தியாவில் ரி-20- 2016-உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் தர்மசலாவில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கு ரசிகர்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் அங்குள்ள மைதானத்தில் கூடுதலாக 5000 ஆசனங்கள் மேலதிகமாக போடப்படவுள்ளது இப்போட்டித் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 8ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறவுள்ளது. சென்னை உட்பட எட்டு மைதானங்களில் இப்போட்டி நடைபெறவுள்ளது.

தர்மசலாவிலும் ஒரு முக்கியப் போட்டி நடைபெறுகிறது. அது இந்தியா -பாகிஸ்தான் இடையிலான போட்டியாகும். தர்மசலா மைதானம் சற்று சிறியதாகும். இங்கு 20,000 இருக்கைகளே உள்ளன. ஆனால் இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்கு ரசிகர்கள் குவிவார்கள் என்பதால் அங்கு இருக்கைகளின் எண்ணிக்கையை 5000 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

dharamsala-stadium india
தர்மசலா அரங்கின் அழகிய தோற்றம்

இதுகுறித்து இமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சர்மா கூறுகையில்,

“இங்குள்ள ஸ்டேடியத்தில் இருக்கைகள் அதிகரிக்கப்படும். மேலும் 5 நட்சத்திர ஹோட்டல் வசதிகளுடன் கூடிய 30 அறைகளும் கட்டப்படும். தற்போது ஸ்டேடியத்துடன் இணைந்த ஹோட்டலில் 100 அறைகள் உள்ளன. இது போக 30 அறைகள் கூடுதலாக கட்டப்படும். இதன் மூலம் சர்வதேச வீரர்கள் இங்கு சவுகரியமாக தங்க முடியும்.

dharamsala-stadium india1
தர்மசலா அரங்கின் அழகிய தோற்றம்

இப்போட்டியின் மூலமாக இங்கு சுற்றுலா நல்ல வளர்ச்சியைப் பெறும் என்று எதிர்பார்க்கிறோம். எனவே இமாச்சல் பிரதேச அரசும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது” என்றார் அவர்.

இதேபோல மகளிர் ரி 20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இரு போட்டிகளும் இங்கு நடைபெறவுள்ளன. மார்ச் 22ம் தேதி ஒரு போட்டியும், 24ம் தேதி இன்னொரு போட்டியும் நடைபெறுகிறது.

Published by

Leave a comment