Category: Your Kattankudy
-
கல்யாணமான ஆண்களேதான் வேணும்: கலாசார சீர்கேட்டு சீரியல்கள்..
தமிழ் டிவி சீரியல்களில் பெரும்பாலும் திருமணமான ஆண்களின் மீது காதல் வயப்படுவது போலவே கதைகள் காட்சிகள் அமைக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும் இத்தகைய சீரியல்களை ஒளிபரப்புவதை தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. பகலோ இரவோ எப்போது போட்டாலும் டிவி சீரியல்களில் ஒன்று ஒப்பாரி வைப்பார்கள் இல்லையா அடுத்தவர் குடும்பத்தை கெடுப்பது எப்படி என்று திட்டம் போடுவார்கள்.
-
எயார் இந்தியா இயந்திரத்தில் சிக்கிய ஒருவர் மரணம்: இரு விமானிகள் பணி நீக்கம்
மும்பை: மும்பையில் எயார் இந்தியா விமானத்தின் இயந்திரம் ஒன்றில் தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் இழுத்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து அந்த விமானத்தின் விமானி மற்றும் இணை விமானியை எயார் இந்தியா நிறுவனம் பணியிடை நீக்கம் செய்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக இந்திய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் கீழ் இயங்கும் விமான விபத்துக்கள் புலனாய்வு அலுவலகம் அதிகாரபூர்வ விசாரணை ஒன்றைத் தொடங்கியிருக்கிறது.
-
ஷெல்சி முகாமையாளர் ஜோஸ் மொரின்ஹோ வெளியேற்றப்பட்டார்!
MJ லண்டன்: கடந்த வருட ஆங்கில பிரிமியர் லீக் சம்பியனும், இங்கிலாந்தின் முன்னணிக் கழகங்களுள் ஒன்றுமான ஷெல்சி (Chelsea) கழகத்தின் முகாமையாளர் (Manager) ஜோஸ் மொரின்ஹோ சற்று முன்னர் கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
-
ஞானசார தேரரின் குர்ஆனை நிந்திக்கும் கருத்துக்கள் குறித்து பிரதமருக்கு முஜிபுர் ரஹ்மான் விளக்கமளிப்பு
கொழும்பு: பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலாகொட அத்தே ஞானசார தேரர் அல் குர்ஆனை நிந்திக்கும் வகையிலும் இலங்கை முஸ்லிம்களை அவமதிக்கும் வகையிலும் தெரிவித்த கருத்து குறித்து பிரதமருக்கு விளக்கமளித்ததாக தெரிவித்த பராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இது குறித்து பொலிஸ்மா அதிபரை சந்தித்து கலந்துறையாட தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
-
கல்முனை நஸீறா அலிக்கு சிறுவர் இலக்கியத்துக்கான கலாபூஷண விருது
சாய்ந்தமருது எம்.எஸ்.எம். சாஹிர் கல்முனை: மஹரகம இளைஞர் சேவைகள் மன்றத்தின் கேட்போர் கூடத்தில் 2015ம் ஆண்டுக்கான அரச கலாபூஷணம் விருது வைபவம் கடந்த 15ஆம் திகதி கலாசார அமைச்சர் எஸ்.பி. நாவின்ன தலைமையில் நடைபெற்றது. இதில் 25 முஸ்லிம் கலைஞர்கள் கலாபூஷண விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந் நிகழ்வில் சிறுவர் இலக்கியத்திற்கான கலாபூஷண விருதை கல்முனை ஏ.ஏ. பாத்திமா நஸீறா பெற்றுக் கொண்ட போது எடுக்கப்பட்ட படம்.
-
கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுவந்த இரு பாகிஸ்தானியர் கைது
கொழும்பு: கொள்ளுப்பிட்டியிலுள்ள நகை விற்பனை நிலையத்தில் நேற்று கொள்ளையிட்டு தப்பிச் சென்ற இரு பாகிஸ்தானியரை இன்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த நபர்கள் நேற்று இரவு நடைக்கடைக்குச் சென்று சுமார் ஒரு கோடி 10 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளையும் இரத்தினக் கற்களையும் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
-
மை வீசிய மாணவர்கள் மீது தாக்குதல் இருவர் வைத்தியசாலையில்
ஏ.எல்.டீன்பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடியில் பிரபலமான பாடசாலை ஒன்றில் கல்வி பயின்று இன்று கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையினை எழுதி விட்டு வழமை போன்று நண்பர்களுடன் சேர்ந்து ஒருவர் மற்றவர் மீது இறுதி நாளான இன்று வீதியில் மையடிக்கும் கலாசாரத்தினை மேற் கொண்ட வேளை அவ்வீதியால் வந்த சிலர் மேற் கொண்ட அதிரடி தாக்குதலினால் இரு மாணவர்கள் வைதியாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
-
இந்தியா- இலங்கை இடையே கடல் பாலம், சுரங்கப்பாதை
சென்னை: தெற்கு ஆசியப் பிராந்தியத்தில் போக்குவரத்து வழித்தடங்களை வலுப்படுத்தும் விதமாக, இந்தியா- இலங்கை இடையே கடல் பாலம், சுரங்கப்பாதை ஆகியவற்றை அமைக்க இந்திய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று இந்திய மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
-
விமான நிலையத்தில் ஜனாதிபதியை துப்பாக்கியுடன் நெருங்கிய மர்ம நபர்!
கொழும்பு: வத்திகானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி இன்று புதன்கிழமை காலை 9 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய வேளையில் முக்கிய விருந்தினர்கள் வரும் பகுதியில் துப்பாக்கியுடன் நடமாடிய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
-
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு
எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலகத்தில் சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு 14.12.2015 இல் பிரதேச செயலாளர் எஸ் எச் முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது. ஒக்டோபர் 01 சிறுவர் தினத்தினை முன்னிட்டு பாடசாலை ரீதியில் கணித விஞ்ஞான தேசப்பட மற்றும் இஸ்லாம் போன்ற பாடங்களில் போட்டி நிகழ்ச்சி அண்மையில் இடம்பெற்றது. இதில் சுமார் 1500 மாணவர்கள் கலந்துகொண்டதுடன் வெற்றிபெற்றவர்களுக்கு இதன்போது பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
-
கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் 2015 –பொதுச் சபைக் கூட்டம்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் 2015 ஆண்டு பொதுச் சபைக் கூட்டம் எதிர்வரும் 18-12-2015 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.மணிக்கு காத்தான்குடி ஸாஹிறா விஷேட தேவையுடையோர் பாடசாலையில் கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் தலைவர் ஏ.எல்.ஆதம்லெப்பை (பலாஹி) தலைமையில் இடம்பெறவுள்ளது.
-
மட்டக்களப்பு மாவட்ட இலக்கிய விழா
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கலாசார அலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்தும் 2015 மட்டக்களப்பு மாவட்ட இலக்கிய விழா 17-12-2015 வியாழக்கிழமை காலை 09.மணிக்கு மட்டக்களப்பு நவற்குடா இந்து கலாசார நிலையத்தில் இடம்பெறவுள்ளது.