Category: Your Kattankudy
-
இலங்கை மீனவரை இழுத்துச் சென்ற இந்தியப் படகுகள்
காரைநகர்: வடக்கு மாகாணம், காரைநகர் கடற்பரப்பினுள் அத்துமீறி உட்புகுந்த இந்திய மீனவர்களின் இழுவைப் படகொன்று அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைநகர் மீனவர் ஒருவரின் வலைகளை நாசப்படுத்தியதுடன், அந்த மீனவரையும் படகுடன் இழுத்துச் சென்று நீரில் மூழ்கடிக்க முயற்சித்ததாக அதிகாரிகளிடம் முறையிடப்பட்டிருக்கின்றது.காரைநகரைச் சேர்ந்த லோகநாதன் என்ற மீனவரே கடற்படை அதிகாரிகளிடமும், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடமும் இவ்வாறு முறையிட்டிருக்கின்றார்.
-
“கருவாடுகளின் மீது பெற்றோல் ஊற்றியே அவை காயவைக்கப்படுகின்றன”
கொழும்பு: காலாவதியான கருவாடுகளின் மீது பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை ஊற்றி வெயிலில் காயவைத்து மீண்டும் விற்பனை செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது காலாவதியாகி புழுக்களுடன் காணப்படும் கருவாடுகளின் மீதே இவ்வாறு பெற்றோல் ஊற்றி வெயிலில் காயவைத்து விற்கப்படுகின்றன.
-
நள்ளிரவில் மல்லியப்பு சந்திக்கு வந்து நாடகமாடியவர்கள் வடிவேல் சுரேஸின் தீக்குளிப்பு முயற்சியை கொச்சைப்படுத்துவதை கண்டிக்கிறேன்
அமைச்சர் பழனி திகாம்பரம் கொழும்பு: நாளாந்த சம்பளத்திற்காக சுமார் 8 மாதங்களுக்கு மேல் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு போராட்டத்தை வென்றெடுக்கவென தனது உயிரையே மாய்த்துக்கொள்ள துணிந்த பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் அவர்களின் சமூக உணர்வை பெரிதும் மதிப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
-
கிழக்கு மாகாண பட்ஜட் இன்று சபையில் சமர்ப்பிப்பு
திருகோணமலை: இன்று திங்கட்கிழமை முற்பகல் 9.35 மணிக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீ்ர் அஹமட், 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட நிதி அறிக்கையை சபையில் சமர்ப்பித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள் தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை தொடர்பான சட்ட வரைபினை சபையயில் சம்மதத்தைப் பெறுவதற்காக முதலமைச்சர் சமர்ப்பிப்பார்.
-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் விவகாரம் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் பாரிய தாக்கம் செலுத்தும்
ஏ.எல். டீன்பைரூஸ் “ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் விவகாரம் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் பாரிய தாக்கம் செலுத்தும்” என முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் NK றம்ழான் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த பாராளமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாரிய சவாலை எதிர் கொண்டிருந்தது.
-
சம்மேளனத்தின் பணிப்புரைக்கு அமைய பிரத்தியேக வகுப்புக்கள் நடாத்துவதில்லையென தீர்மானம்
எம்.எச். எம்.அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் ஏற்கனவே அறிவித்த பிரகாரம் டிஸம்பர் 15 முதல் 31 வரை மாணவர்களின் நலன்கருதி தனியார் வகுப்புக்களை நடத்தவேண்டாம் எனவும், இதனால் டிஸம்பர் மாதத்தில் பாடசாலை விடுமுறையுடன் மாணவர்களுக்கு போதிய ஓய்வு வழங்குமாறும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அறிவித்திருந்தது.
-
கிறிஸ்துமஸ் மரத்திற்கும் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கும் தேவாலயத்தில் இடமில்லை
கொழும்பு: இலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்களுக்குள் கிறிஸ்துமஸ் மரங்களையும் கிறிஸ்துமஸ் தாத்தாக்களையும் (நத்தார் தாத்தா அல்லது சாண்டா கிளாஸ்) கொண்டுவர அனுமதிக்கக் கூடாது என்று ஆயர்கள் முடிவுசெய்துள்ளதாக இலங்கை ஆயர்கள் மன்றத்தை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. ‘கிறிஸ்துமஸ் மரங்களும் கிறிஸ்துமஸ் தாத்தாக்களும் வழிபாட்டுக்கு உரியவை அல்ல’ என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் தேசிய வழிபாட்டு இயக்குநர் அருட்தந்தை இக்னேஷியஸ் வர்ணகுலசிங்கம் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
-
வேகத்தை குறைக்க வேகத்தடை வீதிக் கோடு
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் பிரதான வீதிகளில் யூ வளைவுள்ள இடங்களை வாகன சாரதிகள் முன்கூட்டியே அறிந்து வாகனங்களில் வேகத்தை குறைத்து அவதானமாக செலுத்தும்படி வேண்டி வேகத்தடை வீதிக் கோடுபோடும் பணிகள் மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
-
பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப்பைகள் வழங்கும் நிகழ்வு
ஜுனைட். எம்.பஹ்த் காத்தான்குடி: காத்தான்குடியில் இயங்கிவரும் YESDO அமைப்பினால் இன்று 20.12.2015 காத்தான்குடி கர்பலா பிரதேசத்தில் உள்ள வறிய மாணவர்களுக்கான புத்தகப்பைகள் அல்மனார் கர்பலா பாடசாலையில் வைத்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந் நிகழ்வின் போது உரையாற்றிய YESDO அமைப்பின் செயளார் முகமட் அஸாஹிம் ஆசிரியர்,
-
திருகோணமலையை கைப்பற்றுகிறதா அமெரிக்கா…?
கொழும்பு: திருகோணமலை துறைமுகத்தை கைப்பற்றி விமானப் படை மற்றும் கடற்படை தளங்களை அமெரிக்கா அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.நேபாள விவகாரத்தில் ஏற்கனவே இந்திய வெளியுறவுக் கொள்கை தோல்வியைத் தழுவியது.பல ஆண்டுகளாக இந்தியாவுடன் மிக நெருங்கிய நட்பு கொண்டிருந்த நேபாளத்தில் இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்தது முதலே அங்கே சீனா ஆதிக்கம் ஆரம்பித்துவிட்டது.
-
40 வருடங்களுக்குப் பின் வெளிநாடுகளுக்கு பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் அமெரிக்கா
SHM வாஷிங்டன்: 40 வருடங்களாக அமலில் இருந்த பெட்ரோலிய பொருள் ஏற்றுமதி தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது. இதனால் அந்த நாட்டின் எண்ணெய் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வேலை வாய்ப்பு பெருகும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். 40 வருடமாக நீடித்த பெட்ரோலிய பொருள் ஏற்றுமதி தடையை விலக்கிக்கொள்ளும் சட்டம் அமெரிக்க காங்கிரசில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது அதிபர் ஒபாமா அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது மட்டுமே பாக்கி என்பதால் விரைவில் தடை விலக்கல் அமலுக்கு வர உள்ளது.
-
வரவு செலவுத்திட்டம் நிறைவேறியது
கொழும்பு: நாடாளுமன்ற வரவு செலவுத்திட்டம் 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. திட்டத்துக்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 51 வாக்குகளும் கிடைத்தன. ஜனதா விமுக்தி பெரமுன மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் அதற்கு எதிராக வாக்களித்தனர். ஆனாலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் அதனை ஆதரித்து வாக்களித்தனர்.