வரவு செலவுத்திட்டம் நிறைவேறியது

parliament[1]கொழும்பு: நாடாளுமன்ற வரவு செலவுத்திட்டம் 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. திட்டத்துக்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 51 வாக்குகளும் கிடைத்தன. ஜனதா விமுக்தி பெரமுன மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் அதற்கு எதிராக வாக்களித்தனர். ஆனாலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் அதனை ஆதரித்து வாக்களித்தனர்.

13 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தாலும், அதன் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

parliament[1]

Published by

Leave a comment