வேகத்தை குறைக்க வேகத்தடை வீதிக் கோடு

  • பழுலுல்லாஹ் பர்ஹான்

roadமட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் பிரதான வீதிகளில் யூ வளைவுள்ள இடங்களை வாகன சாரதிகள் முன்கூட்டியே அறிந்து வாகனங்களில் வேகத்தை குறைத்து அவதானமாக செலுத்தும்படி வேண்டி வேகத்தடை வீதிக் கோடுபோடும் பணிகள் மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் ஒர் அங்கமாக மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட மட்டக்களப்பு–கல்முனை நாவற்குடா,கல்லடி ,நொச்சிமுனை ,மஞ்சந்தொடுவாய் ஆகிய பிரதான வீதிகளில் அமைந்துள்ள யூ வளைவுள்ள இடங்களுக்கு அருகாமையில் மேற்படி வேகத்தடை வீதிக் கோடு போடும் பணிகள் தற்போது துரித கெதியில் இடம்பெற்று வருகின்றது.

இதனால் வீதியில் செல்லும் பொது மக்கள்,பாடசாலை மாணவர்கள்,வாகனங்களை ஓட்டும் சாரதிகள் என பலரும் நன்மையடையவுள்ளனர்.

road

கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் யூ வளைவுள்ள இடங்களில் வாகனங்களை வேகமாக செலுத்தி மாறும் பொழுது பெரிய மற்றும் சிறிய விபத்துக்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

road1

குறித்த யூ வளைவுள்ள இடங்களை முன்கூட்டி அறிவிக்கும் வேகத்தடை வீதிக் கோடுகளை பிரதான வீதிகளில் போடும் பொழுது வாகன சாரதிகள் வேகத்தை குறைக்கின்றனர். இதனால் வீதி விபத்துக்களை வெகுவாக குறைக்க முடியும்.

Published by

Leave a comment