கிழக்கு மாகாண பட்ஜட் இன்று சபையில் சமர்ப்பிப்பு

Eastern_Province_Flag_(SRI_LANKA)[1]திருகோணமலை: இன்று திங்கட்கிழமை முற்பகல் 9.35 மணிக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீ்ர் அஹமட், 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட நிதி அறிக்கையை சபையில் சமர்ப்பித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள் தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை தொடர்பான சட்ட வரைபினை சபையயில் சம்மதத்தைப் பெறுவதற்காக முதலமைச்சர் சமர்ப்பிப்பார்.

அத்தோடு 2015 ஆம் ஆண்டுக்கான இலக்குக் குறை நிரப்பு மதிப்பீடு 2016 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீடு நியதிச் சட்டம் (வரவு-செலவுத் திட்ட அறிக்கை) சமர்ப்பிக்கப்படும். அதனைத் தொடர்ந்து ஆளுனர் செயலகம், மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு, மாகாண பேரவைச் செயலகம் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதங்கள் இடம்பெறும்.

இன்றைய தினம் கிழக்கு மாகாண கல்வி, தகவல் தொழிநுட்பக் கல்வி, முன்பள்ளிக் கல்வி, விளையாட்டு, பண்பாட்டலுவல்கள், இளைஞர் விவகாரம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சுக்கான நிதி அறி்க்கையினை கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபானி சமர்ப்பித்து உரையாற்றுவதுடன் குழு நிலை விவாதமும் வாக்கெடுப்பும் இடம்பெறும்.

இன்று மாலை முதலமைச்சரின் கீழ் உள்ள உள்ளூராட்சித் திணைக்களம், கிராமிய அபிவிருத்தி திணைக்களம், கட்டிடங்கள் திணைக்களம், கிராமிய கைத்தொழில்கள் அபிவிருத்தித் திணைக்களம்,

பிரதம செயலாளரின் செயலகம் (நிதி, திட்டமிடல், நிருவாகம், பொருளியல் சேவை) மோட்டார் போக்குவரத்து திணைக்களம், மாகாண உள்ளக கணக்காய்வுத் திணைக்களம், பிரதிப் பிரதம செயலாளர் (ஆளணி மற்றும் பயிற்சி செயலகம்) ஆகியவுற்றுக்கான நிதி அறிக்கையும் முதலமைச்சரினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Published by

Leave a comment