Category: Your Kattankudy
-
நஸாராக்களுடைய நத்தார் தினமும் நமது முஸ்லிம் சமூகமும்
முஹம்மது நியாஸ் உலகிலுள்ள அனைத்து சமயத்தவர்களும் அவரவர்களுடைய சமய நம்பிக்கை, கோட்பாடுகளைப் பிரதிபலிகின்ற வகையில் அமையப்பெற்ற பெருநாள்களை, விசேட தினங்களை கொண்டாடிவருவது உலகியல் மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில் டிசம்பர் மாதம் 25ம் திகதி உலகிலுள்ள பெரும்பான்மையான கிறிஸ்த்தவ மக்கள் ஆங்கிலத்தில் கிறிஸ்மஸ் என்று சொல்லக்கூடிய நத்தார் (“நத்தார்” என்பது தமிழ் வார்த்தையல்ல) தினத்தை மிகவும் கோலாகலமாகக் கொண்டாடிவருகின்றனர்.
-
41ஆவது தேசிய விளையாட்டு விழாவில் 3ம் இடத்தைப்பெற்ற அட்டாளைச்சேனை மிப்ரான்
ஏ.ஜ. ஹஸ்ஸான் அஹமத் அம்பாறை: இம்மாதம் 18 ம், 19 ம், 20 ம் திகதிகளில் ஹோமாகமவில் நடைபெற்ற வரும் மெய்வல்லுநர் போட்டியில், நீளம் பாய்தல் நிகழ்வில் கலந்து கொண்ட எம். ஐ. எம். மிப்றான் 7.27 மீற்றர் பாய்ந்து மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டு வெங்கள பதக்கத்தினைப் பெற்றுக் கொண்டார். அண்மையில் நடைபெற்ற தேசிய மட்ட இளைஞர் விளையாட்டுப் போட்டியின் போதும் நீளம் பாய்தல் நிகழ்வில் கலந்து கொண்ட எம். ஐ. எம். மிப்றான் 7.21…
-
மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யயா மகளிர் அறபுக் கல்லூரியின் அறபு மொழி தின விஷேட நிகழ்வு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி- மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யயா மகளிர் அறபுக் கல்லூரி ஏற்பாட்டில் 2015 சர்வதேச அறபு மொழி தினம் முன்னிட்டு விஷேட நிகழ்வொன்றினை மஃஹத் வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை 2015-12-18 மாலை நடாத்தியது.
-
சிறுநீர் கழித்தால் திருப்பியடிக்கும் சுவர்கள்!
லண்டன்: இவை வித்தியாசமான சுவர்கள். தன்மீது சிறுநீர் கழிப்பவர்களை நோக்கி அந்தச் சிறுநீரை திருப்பியடிக்கும் சுவர்கள் இவை. இந்த சுவர்களின் சிறப்பு மேல்பூச்சு இந்த “திருப்பிக்கொடுக்கும்” வேலையைச் செய்கிறது. இந்தச் சுவர்கள் தற்போது லண்டனில் உள்ள உள்ளூராட்சி நிர்வாகத்தால் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. தன்மீது படும் எந்த திரவத்தையும் திருப்பியடிக்கும் வகையான பிரத்யேக சுவர்ப்பூச்சு தான் இந்த சுவர்களின் கவசமாக இருந்து பாதுகாக்கிறது.
-
தனது தலையில் கத்தியால் குத்திக் கொண்ட விமானப் பயணி: லண்டனில் சம்பவம்!
AF-90 லண்டன்: லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் ஆண் பயணி ஒருவர் தன்னைத்தானே தலையில் கத்தியால் குத்திக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானத்திற்காக பயணிகள் காத்திருந்த சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஆண் பயணி ஒருவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் தன் தலையில் தானே குத்தியுள்ளார். இதைக் கண்டு மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
ஐ.எஸ் இயக்கத்தில் இணையவிருந்த 16 வயது இந்திய மாணவி
புனே: புனேவைச் சேர்ந்த 16 வயது மாணவியை மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்பு பொலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த மாணவியிடம் விசாரணை நடத்தி வருவதை வியாழக்கிழமை இரவு பயங்கரவாத தடுப்பு பொலீஸார் உறுதி செய்தனர். இது குறித்து பயங்கரவாத தடுப்புப் பிரிவின் உயர் அதிகாரி பானுபிரதாப் பார்கே கூறும்போது, “விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள மாணவி 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். படிப்பில் மிகவும் கெட்டிக்காரரான இவரது நடவடிக்கையில் மீது சமீப காலமாக மாற்றம்…
-
இலங்கை வீரர்களை சூதாட்ட தரகர் ஒருவர் அணுகிய விபரம்
கொழும்பு: இலங்கையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றின்போது, ஆட்டநிர்ணய சூதாட்டத்தில் ஈடுபடுமாறு சூதாட்டத் தரகர் ஒருவர் இலங்கை வீரர்களை அணுகியிருப்பதாக இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி கடந்த அக்டோபர் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, இந்த ஆட்ட நிர்ணய சூதாட்ட முயற்சி நடந்துள்ளதாக இலங்கையின் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
-
இந்தியாவுடன் மோதுவது மிகப்பெரும் சவால்: அப்ரிடி
லாஹூர்: இந்திய அணியுடன் மோதுவது என்பது எப்போதுமே மிகப்பெரும் சவாலானதுதான், ஆனால் அதை எதிர்கொள்ளும் துணிவு பாகிஸ்தான் அணிக்கு இருப்பதாக அப்ரிடி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் 20 ஓவர் அணியின் தலைவரான ஷாகித் அப்ரிடி, இந்திய மண்ணில் அந்த அணியை எதிர்கொள்வதில் இருக்கும் சவால் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
-
புலமைப் பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளி விபரம்
கொழும்பு: 2015 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் பாடசாலை அடிப்படையில் வெட்டுப்புள்ளி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கமைய கொழும்பு ரோயல் கல்லூரி – 184 புள்ளிகள், கண்டி தர்மராஜ வித்தியாலயம் – 182 புள்ளிகள், கொழும்பு ஆனந்த கல்லூரி – 181 புள்ளிகள், கொழும்பு நாலந்த கல்லூரி – 179 புள்ளிகள், கொழும்பு மலியதேவா ஆண்கள் வித்தியாலயம் – 179 புள்ளிகள் என்ற அடிப்படையில் வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
சத்தோச களஞ்சிய சாலைக்கு ரிசாத் பதியுதீன் அதிரடி விஜயம்
ஏ.எச்.எம். பூமுதீன் கொழும்பு: வெலிசறையில் அமைந்துள்ள சத்தோச நிறுவனத்தின் பாரிய களஞ்சிய சாலைக்கு நேற்றிரவு அமைச்சர் ரிசாத் பதியுதீன் அதிரடி விஜயத்தின் மூலம் பல குழறுபடிகளை கண்டறிந்துள்ளார். பொதுமக்கள் மத்தியிலிருந்து அமைச்சருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்தே அமைச்சர் ரிசாத் மேற்படி விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
-
சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்திற்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் நிதி ஒதுக்கீடு
ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்திற்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், 1 கோடி 5 லட்சம் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளார்.இந்நிதி ஒதுக்கீட்டின் மூலம் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில் புதிய வகுப்பறைக் கட்டிட நிர்மாணத்திற்கு 50 லட்சம் ரூபாவும், சாய்ந்தமருது விளையாட்டு மைதான அபிவிருத்திற்கு 20 லட்சம் ரூபாவும்,
-
வெண்ணெய்ச் சுறாவும் கொழுப்புத் திருக்கையும் – புத்தளத்தின் மீன் வளம்
எம்.ஐ.ஏ. அஸ்ஜத் புத்தளம்: புத்தளம் மாவட்டம் என்பது ”மீன்பிடிக்கு” பெயர் போன ஒரு மாவட்டம் ஆகும். அதிலும் குறிப்பாக கல்பிட்டி பகுதி மக்கள் வருடம் தோறும் இந்த தொழிலில் ஈடுபடுகின்றனர் . காரணம் இவர்களுக்கு சிறு கடல், பெருங்கடல் ஆகிய இரண்டு கடல்களும் வாய்ப்பாக அமைந்துள்ளமையாகும்.