Category: Your Kattankudy
-
நல்லதொரு தலைவரை புத்தளம் பிரதேச சபைப் பிரிவிலுள்ள மக்கள் இழந்துள்ளனர்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: சகல சமூகத்தையும் மதித்து அம்மக்களது தேவைகளை நிவர்த்தி செய்வதில் தமது அரசியல் காலத்தில் கண்ட நல்லதொரு தலைவரை புத்தளம் பிரதேச சபைப் பிரிவிலுள்ள மக்கள் இழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன், புத்தளம் பிரதேரச சபை தலைவரின் இழப்பால் துயறிற்றிருக்கும் அவரது குடும்பத்தினரும், அவரது ஆதரவாளர்களுக்கும் தமது ஆழ்ந்த கவலையினையினையும் தெரிவித்துள்ளார்.
-
பாலமுனை அம்மார் ஜூம்மா பள்ளிவாயலின் இன்றைய ஜூம்மா உரை-(ஒலிப்பதிவு)
– அபூ ஸாலிஹ் காத்தான்குடி: ஆரையம்பதி –பாலமுனை அம்மார் ஜூம்மா பள்ளிவாயலில் 26-04-2013 வெள்ளிக்கிழமை இன்று இடம்பெற்ற ஜூம்மா உரையின் ஒலிப்பதிவு இணைக்கப்பட்டுள்ளது.
-
உயிரை கொடுத்தாயினும் தொழிலாளர் உரிமைக்காக போராடுவேன் – ஹில்மி
– ரைஸ் கிண்ணியா: தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஒன்றுகூடல் நேற்று 25.04.2013 வியாழக்கிழமை கிண்ணியா பொதுநூலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. அன்றாடம் தமது ஜீவநோபாயத்திற்காகவும் தமது குடும்ப நிலையினையும் கருத்திற் கொண்டு உழைப்பிற்காக தன் வியர்வையை நிலத்தில் சிந்தி உழைக்கின்ற ஒருவனின் உரிமைகள் மறுக்கப்படும் போது வேலை கொள்வோர் மீதான போராட்டம் ஆரம்பமாகிறது.
-
வங்கதேச கட்டட விபத்து: இன்னும் 1000 பேரைக் காணவில்லை
டாக்கா: வங்கதேசத்தில் கடந்த புதன்கிழமை நடந்த கட்டட விபத்தில் சிக்கியவர்களில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் இன்னும் தேடப்பட்டுவருகின்றனர். தலைநகர் டாக்கா அருகே உள்ள ராணா பிளாஸா என்ற ஆடைத் தொழிற்சாலைக் கட்டடம் இடிந்துவிழுந்ததில் குறைந்தது 273 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
-
செங்கலடி நகரில் இடம்பெற்ற இரட்டைக்கொலை தொடர்பான சந்தேகநபர்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர் !
மட்டக்களப்பு: செங்கலடி நகரில் இடம்பெற்ற இரட்டைக்கொலை தொடர்பான சந்தேகநபர்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர் செய்யப்படுவதற்காக அழைத்து வரப்பட்டனர். இவர்களை காண ஏராளமானோர் நீதிமன்ற சூழலில் குவிந்து நின்றனர்.
-
மட்டு-நாவற்குடா பிரசேத்திலுள்ள வீடொன்றில் 34 கிலோ 700 கிராம் கஞ்சா காத்தான்குடி பொலிசாரினால் மடக்கி பிடிப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா பிரசேத்தில் நேற்று (25.4.2013) வியாழக்கிழமை முப்பத்து நான்கு கிலோ, 700 கிராம் கஞ்சாவை காத்தான்குடி பொலிசார் கைப்பற்றியதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ரணசிங்க தெரிவித்தார்.
-
அனைவரும் ஐக்கியத்துடன் ஒன்றிணைவதன் மூலமே பல்வேறு நோக்கங்களை அடைய முடியும்- அஷ்ஷெய்க் மௌலவி அஸ்பர் ஹஸன் (பலாஹி)
-பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேலாக உருவாக்கப்பட்டு இயங்கி வரும் எமது காத்தான்குடிப் பிரதேச தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தின் செயற்பாடுகளை விஸ்தரிக்கும் நோக்கில் உலமாக்கள் மற்றும் செயற்பட்டுக் கொண்டிருந்த குறித்த அமைப்பின் கீழ் கல்வியியலாளர்கள், பிரதேசத்திலுள்ள தௌஹீத் அமைப்புக்கள்,
-
‘அமைப்புக்கள் ரீதியாக ஒருமித்துச் செல்வோம்’ எனும் கருப்பொருளில் காத்தான்குடி தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தின் ஒன்று கூடல்
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடிப் பிரதேச தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பிரதேசம் தழுவிய சகல தௌஹீத் அமைப்புக்களை உள்ளடக்கியதான அமைப்பினரின் ஒன்று கூடல் நிகழ்வும் விஷேட தர்பியாவும் இன்று வியாழக்கிழமை இஷாத் தொழுகையின் பின் காத்தான்குடி மஸ்ஜிதுல் குபா ஜும்மாப் பள்ளிவாயலில் தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தின் தலைவர் அஷ்ஷெய்க் மௌலவி அஸ்பர் ஹஸன் (பலாஹி) தலைமையில் இடம்பெற்றது.
-
காத்தான்குடியின் தற்போதய நிலை…
– AK-77 காத்தான்குடி: ஓர் திடீர் காற்று, இடி-மின்னலுடன் இன்று மாலை பெய்த மழையை அடுத்து, பிரதான வீதிகளில் மக்கள் கூட்டம் குறைந்து வருகிறது. நாளைய விடியலை நோக்கிய ஓர் எதிர்பார்ப்பில் மக்களின் உறங்கள் இன்றைய இரவை தொட்டுச்செல்லும்.
-
உல்லாசப்பிரயாணிகளின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட வேண்டும் – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்
-பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: உல்லாசப்பிரயாணிகளின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட வேண்டும் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான ஹிஸ்புல்லாஹ் உல்லாசப்பிரயானத்துறையினருக்குக் கடுமையான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
அனாமோதய குருஞ்செய்திக்கும் PMGGக்கும் எவ்விதத் தொடர்புமில்லை
-PMGG காத்தான்குடி: 0779714728 என்ற கைத்தொலைபேசி இலக்கத்தில் இருந்து நாளை ஜும்மா தொழுகையின் பின் அண்மையில் பாலியல் சேஷ்டை விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட காத்தான்குடி நகர சபையின் ஆளும் தரப்பு உறுப்பினர் பாக்கீர் ஆசிரியருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்துக்கு அணி திரளுமாறு குறுந்தகவல் செய்தி ஒன்று இன்று நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் பெயரில் பரவலாக அனுப்பப்பட்டிருந்தது.
-
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியின் பயனாக 35இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடியில் புதிய பள்ளிவாசல்
-பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கிழக்கு மாகாணத்தில் 100 வீதம் முஸ்லிம்கள் செறிந்து வாழும் காத்தான்குடி பிரதேசத்தில் மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள மீரா பாலிகா பெண்கள் மகா வித்தியாலயத்திற்கு பின்னால் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அயராத முயற்ச்சியின் பயனாக