அனைவரும் ஐக்கியத்துடன் ஒன்றிணைவதன் மூலமே பல்வேறு நோக்கங்களை அடைய முடியும்- அஷ்ஷெய்க் மௌலவி அஸ்பர் ஹஸன் (பலாஹி)

???????????????????????????????-பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேலாக உருவாக்கப்பட்டு இயங்கி வரும் எமது காத்தான்குடிப் பிரதேச தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தின் செயற்பாடுகளை விஸ்தரிக்கும் நோக்கில் உலமாக்கள் மற்றும் செயற்பட்டுக் கொண்டிருந்த குறித்த அமைப்பின் கீழ் கல்வியியலாளர்கள், பிரதேசத்திலுள்ள தௌஹீத் அமைப்புக்கள், பள்ளிவாசல்கள் பிரதிநிதிகள், நிர்வாகிகளை ஒன்றிணைத்து ஒரே தலைமைத்துவத்தின் கீழ் கட்டுக்கோப்புடன் நாம் செயற்பட வேண்டும் என தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தின் தலைவரும் மருதமுனை தாறுல் ஹுதா பெண்கள் அரபுக் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் மௌலவி அஸ்பர் ஹஸன் (பலாஹி) தெரிவித்தார்.

காத்தான்குடிப் பிரதேச தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பிரதேசம் தழுவிய சகல தௌஹீத் அமைப்புக்களை உள்ளடக்கியதான அமைப்பினரின் ஒன்று கூடல் நிகழ்வும் விஷேட தர்பியாவும் நேற்று வியாழக்கிழமை இஷாத் தொழுகையின் பின் காத்தான்குடி மஸ்ஜிதுல் குபா ஜும்மாப் பள்ளிவாயலில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றுகையில்,

எமது புதிய அமைப்பினூடாக பிரதானமாக கல்விப்பிரிவு, தஃவாப்பிரிவு, சமூக சேவைப்பிரிவு என மூன்று பிரிவுகளை உருவாக்கவுள்ளோம்.

அவற்றில் கல்விப்பிரிவிற்கு தனிமையான துறைசார்ந்தவர்களை நியமித்து பல்வேறு கல்விசார் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.

அவ்வப்போது காலத்திற்கேற்ப க.பொ.த சாதாரண, உயர்தர மாணவர்களுக்கு கருத்தரங்குகள், ஆண்மீக வதிவிடப் பயிற்சிக் கருத்தரங்கு என்பவற்றை நடாத்தவுள்ளோம்.

அடுத்த தஃவாப் பிரிவில் சமூகத்தில் தோன்றும் பிரச்சினைகளுக்கு உலமாக்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஆய்வு செய்து ஒருமித்த பத்வாக்களை வெளியிடவுள்ளோம். தனிநபர் மகிமையை விட்டு விட்டு கூட்டாக இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளோம்.

குத்பாக்கள், விசேட பயான் நிகழ்ச்சிகள் என்பவற்றை குறித்த அமைப்பினூடாக முன்னெடுப்பதற்கும் திட்டமிட்டுள்ளோம்.

???????????????????????????????

மூன்றாவதாக சமூக சேவைப் பிரிவில் சமூகத்தில் காணப்படுகின்ற மிகப் பெரிய பாவமான வட்டியை ஒழித்தல், அதற்கு மாற்றீடாக வட்டியில்லாக் கடனை வழங்க திட்டமிட்டுள்ளோம்.

குறித்த பிரிவுகளினூடாக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ள நாம் எமக்கு மத்தியில் பிரச்சினைகள் ஏற்படுமிடத்து அவற்றை எமது ஒண்றிய நிர்வாகத்திற்கு அறிவித்து அதற்கான தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

எப்போழுதும் சகலரும் ஒன்றிணைவதன் மூலமே பல்வேறு அடைவுகளைக் காண முடியும் எனவும் எமது ஒன்றியத்தின் ஊடாக மேலும் பல பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தின் தலைவரும் மருதமுனை தாறுல் ஹுதா பெண்கள் அரபுக் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் மௌலவி அஸ்பர் ஹஸன் (பலாஹி) தெரிவித்தார்.

Published by

Leave a comment