கொழும்பு: உல்லாசப்பிரயாணிகளின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட வேண்டும் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான ஹிஸ்புல்லாஹ் உல்லாசப்பிரயானத்துறையினருக்குக் கடுமையான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னர் உல்லாசப் பயணத்துறை அதிகாரசபைக்கு நேற்று புதன்கிழமை உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்ட பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அந்நிறுவனத்தின் தலைவர் பாஸ்வர குணரத்ன,அதிகாரிகள் உள்ளிட்ட பலரையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இங்கு இலங்கைக்கு வருகின்ற உல்லாசப்பிரயாணிகளின் பாதுகாப்பு தொடர்பாக அதிக கவணம் செலுத்திய பிரதியமைச்சர் தங்காலையில் பிரிட்டிஷ் பிரஜையொருவர் கொல்லப்பட்டது மற்றும் நாட்டின் பலபாகங்களில்; உல்லாசப் பிரயாணிகளுக்கெதிராக இடம்பெற்று வரும் சில வன்முறைகள் காரணாமாக சர்வதேசத்தில் இலங்கையின் பெயருக்குக் கலங்கம் ஏற்பட்டிருப்பதாகவும்; அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டினார்.
மேலும் உல்லாசப் பிரயாணிகளின் உயிர்,உடமை ரீதியான பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியமான கடமையாகும் எனக்;குறிப்பிட்ட பிரதியமைச்சர் அவ்வாறான சந்தரப்பத்திலே அவர்கள் நாட்டில் தாம் விரும்பிய இடங்களுக்குச் சென்றுவருவதுடன் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எதர்காலத்தில் வரவழைக்கப்படுவதற்கான வாய்ப்புக் கிடைக்கும் எனக்குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டில் எதிர்பார்த்த பத்து இலட்சம் எனும் தொகையினைவிட ஐயாயிரம் பயணிகளை அதிகமாகப் பெற்ற இலங்கை இந்த ஆண்டில் பன்னிரெண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் என்ற அடைவினை நோக்கிப் பயணிப்பதாகவும் 2016 ஆம் ஆண்டில் இருபத்தைந்து இலட்சம் உல்லாப் பிராயாணிகளை எதிர்பார்ப்பதாகவும் இவ்வேளையில் நாட்டில் தொடர்ந்து உல்லாப் பிராயாணிகளுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படாவிட்டால் உல்லாசப் பயணத்துறையில் பாரிய வீழ்ச்சி ஏற்படுமெனவும் அமைச்சர் கவலை தெரிவித்தார்.
உல்லாசப் பயணத்துறையினுடைய பாதுகாப்பின் நிமித்தம் அதன் குறைகளை அடையாளம் கண்டு தேவையான வாகனங்கள்,ஆளணிகளை உடனடியாக வழங்குமாறு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அமைச்சினுடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதுடன் பொலிஸ்மா அதிபர் மற்றும் சம்மந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுடனும் கலந்துரையாடி அதன் பாதுகாப்புக்குத் தேவையான சகல நடவடிக்கையினையும் எடுக்குமாறு பிரதியமைச்சர் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இது தொடர்பான அறிக்கைளை தனக்கு சமர்ப்பிக்கவேண்டுமென பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கேட்டுக்கொண்டதாக அமைச்சின் ஊடக செயலாளர் எம்.எஸ்.எம் சஜி தெரிவித்தார்.

Leave a comment