காத்தான்குடி: காத்தான்குடிப் பிரதேச தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பிரதேசம் தழுவிய சகல தௌஹீத் அமைப்புக்களை உள்ளடக்கியதான அமைப்பினரின் ஒன்று கூடல் நிகழ்வும் விஷேட தர்பியாவும் இன்று வியாழக்கிழமை இஷாத் தொழுகையின் பின் காத்தான்குடி மஸ்ஜிதுல் குபா ஜும்மாப் பள்ளிவாயலில் தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தின் தலைவர் அஷ்ஷெய்க் மௌலவி அஸ்பர் ஹஸன் (பலாஹி) தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் நாஸர் (ஜமாலி), ஒன்றியத்தின் உப தலைவர்களில் ஒருவரான அஷ்ஷெய்க் நஷ்மல் (பலாஹி), ஒன்றியத்தின் உப தலைவர்கள், இணைச்செயலாளர்கள், காத்தான்குடிப் பிரதேசத்தைத் தழுவிய அமைப்புக்களான மஸ்ஜிதுல் குபா, இஸ்லாமிக் சென்ரர், காங்கேயனோடை, பாலமுனை மஸ்ஜிதுல் அம்மார் உள்ளிட்ட அமைப்புக்கள், பள்ளிவாயல் நிருவாகிகள், துறைசார் அறிஞர்கள், உலமாக்கள்,பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது தௌஹீத் ஒன்றியத்தின் ஆரம்பம், அதன் தூர நோக்கு இலக்கு என்பன பற்றி அமைப்பின் முன்னாள் தலைவரும் தற்போதைய உப தலைவர்களில் ஒருவருமான அஷ்ஷெய்க் நஷ்மல் (பலாஹி), நமது இலக்கு என்ன, அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஅத்தினோர் யார்? அவர்களின் கோட்பாடு என்பன பற்றி காத்தான்குடி மஃஹதுஸ் ஸுன்னா பெண்கள் அரபுக் கல்லூரி தலைவர் அஷ்ஷெய்க் மௌலவி றிஸ்வான் (மதனி), எமது இந்ந அமைப்பின் நகர்வுகள் எனும் தலைப்பில் ஒன்றியத்தின் தலைவர் அஷ்ஷெய்க் மௌலவி அஸ்பர் ஹஸன் (பலாஹி) ஆகியோர் உரைநிகழ்த்தினர்.
இங்கு காத்தான்குடி மஸ்ஜிதுல் குபா ஜும்மாப் பள்ளிவாயல் நிர்வாகத்தினரால் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் அமைப்புக்கள் ரீதியாக நாம் எவ்வாறு ஒருமித்துச் செல்வது, எமது இலக்குகள் என்பன பற்றியும் விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






Leave a comment