Category: Your Kattankudy
-
‘கல்வி நிர்வாக சேவை நியமனத்தில் அரசியல்’ – ஆசிரியர் சங்கம் வழக்கு
கொழும்பு: இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை புறக்கணித்துவிட்டு, பரீட்சையில் தோற்றாத ஆளும் கட்சி ஆதரவாளர்களுக்கு நியமனங்களை வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவை ரத்துச் செய்ய வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
-
அரசாங்கத்தை இக்கட்டுக்குள்ளாக்கும் நோக்கத்திலேயே மனித உரிமை மீறல் சம்பந்தமான தீர்மானங்கள்-வியட்நாம் பிரதமரிடம் அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு!
– பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: ஜெனீவாவில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட மனித உரிமை மீறல் சம்பந்தமான தீர்மானங்கள், இலங்கையை ஐ.நா பொதுச் சபையிலும், பாதுகாப்புச் சபையிலும் சிக்கலுக்கும், இக்கட்டான நிலைமைக்கும் உள்ளாக்கும் நோக்கத்திலேயே கொண்டுவரப்பட்டதாக நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் கூறினார்.
-
தங்கத்தை செயற்கையாக விலைசரியச் செய்யலாம்!
-OIT தங்கத்தின் விலைக்குறைவில் மக்கள் ஆனந்தப்படும் இந்நேரத்தில் அதன் பின்னர் ஏற்படும் பொருளாதார தாக்கங்களையும் அதே மக்களே எதிர்நோக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை இன்றைய உலகில் அன்மைக்காலமாக ஏற்பட்டு வருகிறது.
-
மின் கட்டண விவகாரம்: ஐ.தே.க. சபையினுள் கூச்சல்; குழப்பம்
கொழும்பு: மின்கட்டண அதிகரிப்பு குறித்து முழுநாள் விவாதம் 9ஆம் திகதி நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டபோதும் எதிர்க்கட்சியினர் நேற்று சபை மண்டபத்தில் மெழுகு வர்த் திகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பாராளுமன்றம் நேற்றும் இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்டது.
-
எய்ட்ஸ்சினை விட கொடிய புதிய நோய் ‘கொணோரியா’: ஓர் எச்சரிக்கை
-OIT லண்டன்: மனிதர்களை மிரட்டும் எய்ட்ஸ் நோய்க்கே இன்னும் சரியான அளவில் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் மற்றொரு பால்வினை நோய் மக்களை அதிகபட்சமாக அச்சுறுத்தி வருகிறது.
-
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் அவர்களின் தலமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
– திருமலை பஹ்மியூஸூப் திருகோணமலை: கிழக்கு மாகாணசபையின் அமைச்சரவைக் கூட்டம் சென்ற 22.04.2013ம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் அவர்களின் தலமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை கிழக்கு மாகாண அமைச்சரவையின் பேச்சாளரும், வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்கள் பத்திரிகையாளர்; மகா நாட்டில் வெளியிட்டார். அத்தீர்மானங்கள் பின்வருமாறு.
-
சம்மேளன கல்வி அபிவிருத்திச் சபை விடுக்கும் முக்கிய அறிவித்தல்.
அன்படையீா்.. அஸ்ஸலாமு அலைக்கும் (வறஹ்மது……) காத்தான்குடி: அன்புப் பொது மக்களுக்கு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன கல்வி அபிவிருத்திச் சபை விடுக்கும் முக்கிய அறிவித்தல்.
-
காலியில் இயங்கும் ஷரீஆ பட்டப்பின் படிப்புக் கல்வி நிலையத்தியில் மூன்று மாதகால பயிற்சிநெறியை முடித்துக் கொண்ட தென் மாகாண உலமாக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் வைபவம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காலி: காலி இப்னு அப்பாஸ் அறபுக்கல்லூரியில் அமைந்துள்ள ஷரீஆ பட்டப்பின் படிப்புக் கல்விநிலையத்தியில் தமது மூன்று மாதகால பயிற்சிநெறியை முடித்துக் கொண்ட தென் மாகாண உலமாக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் இப்னு அப்பாஸ் அறபுக்கல்லூரி பள்ளிவாயல் மண்டபத்தில் அண்மையில் ஷரீஆ பட்டப்பின் படிப்புக் கல்வி நிலையத்த்தின் பணிப்பாளரும் இப்னு அப்பாஸ் அரபுக்கல்லூரியின் தலைவருமான மௌலவி எம்.ஓ. பத்ஹுர் ரஹ்மான் (பஹ்ஜி) தலைமையில் நடைபெற்றது.
-
பாக்கிர் மீதான பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டும் மக்களின் தற்போதயை நிலைப்பாடுகளும்…
AK-77 காத்தான்குடி: தற்பொழுது காத்தான்குடியை அதிரவைத்துக்கொண்டிருக்கும் மேற்படி சம்பவத்தில் சம்பந்தப்பட்ட, காத்தான்குடி நகரசபை உறுப்பினரான பாக்கீர், தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் அபாண்டமான குற்றச்சாட்டை களைந்தெரிய நாம் ஏற்கனவே தெரிவித்திருந்தது போல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மெத்தைப்பளள்ளிவாயலில் சத்தியம் செய்வதற்கு தயாராக இருப்பதாக எமது செய்தியாளருக்கு சற்று முன்னர் தெரிவித்திருந்தததை நாம் பிரசுரித்திருந்தோம்.
-
குவைத் K-Tic நடாத்தும் மாபெரும் பட்டிமன்றம்
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம.. அறிஞர்களும், பேச்சாளர்களும் மட்டுமே பங்கேற்கும் பட்டிமன்ற நிகழ்வுகளுக்கு மாற்றமாக பொதுமக்கள் மட்டுமே பங்கேற்று தங்களின் எண்ணங்களையும், கருத்துக்களையும் பகிர்ந்து கொள்வதற்காக குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), இன்ஷா அல்லாஹ்… எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதியில் “சிறப்பு பட்டிமன்றம்” நிகழ்ச்சியை குவைத்தில் முதல் முறையாக ஏற்பாடு செய்துள்ளது.
-
கிண்ணியா மட்டக்களப்பு வீதியிலுள்ள சட்டவிரோத கடைகள் நகரசபையால் சுற்றிவளைப்பு!
– ரைஸ் கிண்ணியா: கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் எம்.எம்.ஹில்மியின் முன்னெடுப்பில் கிண்ணியா நகரசபைக்குட்பட்ட எல்லைப் பிரதேசம் அழகுபடுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் முதற்கட்டமாக கிண்ணியா புஹாரியடி சந்தி அழகுபடுத்தும் வேலைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், அடுத்த கட்ட முன்னெடுப்பாக கிண்ணியா-மட்டக்களப்பு பிரதான வீதியோர புனரமைப்பு வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
-
இலங்கைக்கான ஜேர்மன் நாட்டு தூதுவர் டொக்டர் ஜேர்கன் மொர்ஹாட், அமைச்சர் றிசாத் பதியுதீன் சந்திப்பு
– இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: இலங்கைக்கும் ஜேர்மனுக்கும் இடையில் இரு தரப்பு வர்த்தக மேம்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இலங்கையானது ஆசிய கண்டத்தின் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாகும் என்று இலங்கைக்கான ஜேர்மன் நாட்டு தூதுவர் டொக்டர் ஜேர்கன் மொர்ஹாட் கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் தெரிவித்தார்.