காத்தான்குடியின் தற்போதய நிலை…

BY: FM. FARHAN

AK-77

காத்தான்குடி: ஓர் திடீர் காற்று, இடி-மின்னலுடன் இன்று மாலை பெய்த மழையை அடுத்து, பிரதான வீதிகளில் மக்கள் கூட்டம் குறைந்து வருகிறது. நாளைய விடியலை நோக்கிய ஓர் எதிர்பார்ப்பில் மக்களின் உறங்கள் இன்றைய இரவை தொட்டுச்செல்லும்.

குற்றம் சுமத்தப்பட்டவரை கைது செய்ய வக்கில்லாமல் பொலிஸாரும், சம்பந்தப்பட்ட இருவரையும் அழைத்து விசாரிக்க முடியாத நிலையில் ஊர்தலைமைகளும் தடுமாறிடும் இத்தருணத்தை, கச்சிதமாகக் கையாண்டு சில விசமிககளால் மேற்கொள்ளப்பட்டு வரும் அநாமோதய துண்டுப்பிரங்கள், தொலைபேசி அழைப்புக்கள், மற்றும் குறுந்தகவல்கள் விடயத்தில் ஊர்த்தலைவர்களும், அதிகாரிகளும் நிதானமாகவும், அவதானமாகவும் இருந்து வருமாறு கேட்கப்படுகின்றனர்.

நாளைய விடியும் பொழுது ஓர் தீர்ப்பு நாளின் பொழுதாக அமைய வேண்டும் எனவும் ஏதோ ஓர் அச்ச உணர்வுகள் மக்கள் மத்தியில் காணப்படுவதையும் அறிய முடிகிறது.

இதற்கிடையில் பாக்கீர் சத்தியம் செய்வது விடயமாக மிக இரகசிய பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளும் திறைமறைவில் நடைபெற்று வருவதாகவும், இதன்காரணமாக மக்கள் நாளைய ஜூம்ஆவின் பின்னர் மிக அவதானமாகவும், நிதானமாகவும் நடந்துகொள்ளுமாறும் கேட்கப்படுகின்றனர். பாக்கீர் அவர்களின் நாளைய சத்தியத்தை அறிய உலகமக்கள் ஆவலாக இருக்கின்றனர்.

பாக்கீரை கைதுசெய்யாத பொலிஸார் பொது மக்களை கைது செய்யலாம் எனவும் கேலியாவும் வேடிக்கையாகவும் பேசிவருகின்றனர் என்பதும் இன்றைய காத்தான்குடியின்  ‘ஹைலைட்ஸ்’

Published by

Leave a comment