
-பழுளுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: கிழக்கு மாகாணத்தில் 100 வீதம் முஸ்லிம்கள் செறிந்து வாழும் காத்தான்குடி பிரதேசத்தில் மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள மீரா பாலிகா பெண்கள் மகா வித்தியாலயத்திற்கு பின்னால் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அயராத முயற்ச்சியின் பயனாக காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த தனவந்தர் ஒருவரின் 35 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் ‘மஸ்ஜிதுல் பாத்திமா’ பள்ளிவாயல் எனும் பெயரில் காத்தான்குடி -06 அமானுல்லாஹ் வீதியில் இன்று வியாழக்கிழமை அஸர் தொழுகையின் பின் பொருளாதார அபிவிருத்தி பிரதயமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டது.
இதன் போது காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் உப தலைவரும் ,ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளருமான மௌலவி கவிமனி எம்.எச்.எம்.புகாரி பலாஹியினால் பள்ளிவாளின் சிறப்பு பற்றி சிறப்பு பயான் ஒன்றும் நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் , காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் ஜிப்ரி மதனி , காத்தான்குடி நகர சபை பிரத் தவிசாளர் ஜெஸீம் ,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட், பொருளாதார அபிவிருத்தி பிரதயமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் செயலாளர் முஹம்மட் றுஸ்வின், மஸ்ஜிதுல் பாத்திமா பள்ளிவாயல் தலைவர் எம்.எம்.இப்றாஹீம், மஸ்ஜிதுல் பாத்திமா பள்ளிவாயல் நிர்வாக சபை உறுப்பினர்களான ஏ.எச்.முஹமட், உட்பட உலமாக்கள், ஊர் பிரமுகர்கள், பொது மக்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
இங்கு அஸர் தொழுகை மௌலவி ஸைனுத்தீன் பலாஹியினால் நடத்தப்பட்டதுடன், விஷேட துஆ பிராத்தனை மட்டக்களப்பு மத்தி கல்வி வலய இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர் மௌலவி அப்துல் கபூர் மதனியினால் நிகழ்த்தப்பட்டது.
Leave a comment