நல்லதொரு தலைவரை புத்தளம் பிரதேச சபைப் பிரிவிலுள்ள மக்கள் இழந்துள்ளனர்

– இர்ஷாத் றஹ்மத்துல்லா

diluk-2 - Copyகொழும்பு: சகல சமூகத்தையும் மதித்து அம்மக்களது தேவைகளை  நிவர்த்தி செய்வதில் தமது அரசியல் காலத்தில் கண்ட நல்லதொரு தலைவரை புத்தளம் பிரதேச சபைப் பிரிவிலுள்ள மக்கள் இழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன், புத்தளம் பிரதேரச சபை தலைவரின் இழப்பால் துயறிற்றிருக்கும் அவரது குடும்பத்தினரும், அவரது ஆதரவாளர்களுக்கும் தமது ஆழ்ந்த கவலையினையினையும் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை அதிகாலை கொழும்பிலிருந்து மதுரங்குளியில் அமைந்துள்ள புத்தளம் பிரதேச சபையின் தலைவர் திலுக் பத்திரனவின் வீடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது பத்துலு ஒய பகுதியில் இடம் பெற்ற விபத்தில் பலியான புத்தளம் பிரதேச சபையின் தலைவரின் மரணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அரசியலில் நீண்டகாலமாக நெருக்கம் கொண்ட திலுக் பத்திரன, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தராக சிறுகாலம் பணியாற்றி மக்கள் மத்தியில் நல்லதொரு இடத்தை பெற்றுக் கொண்டார்.அதன் பின்னர் புத்தளம் பிரதேச சபைக்கு போட்டியிட்டு ஆளும் கட்சியின் சபை தலைவராக பெணியாற்றிவந்தார்.

வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் புத்தளம் பிரதேச சபை எல்லையில் தற்காலிக கொட்டில்களில் வாழ்ந்த போதுஇஅவர்கள் எதிர் கொண்ட சுற்றாடல் பிரச்சினை மற்றும் வடிகலாமைப்பு பிரச்சினைகளின் போதும்இஅம்மக்களுக்கு தேவையான குடிநீரை பெற்றுக் கொடுக்கவும் உதவிகளை வழங்கிய ஒருவராக அமர்ர் திலுக் பத்திரனவை அடையாளப்படுத்த முடியும்.

மீள் குடியேற்றஇமற்றும் அனர்த்த சேவைகள் அமைச்சராக இருந்த காலத்தில் இடம் பெயர்ந்த மற்றும் உள்ளுரி மக்களுக்கும் உள்ள தேவைகள் குறித்து திற்நத மனதுடன் இன சிந்தனைகளுக்கு அப்பால் பல முறை என்னை அமைச்சிலும், எனது தில்லையிடி வீட்டிலும் வந்து பேசியதை நான் இன்றும் நினைவு கூறுகின்ற்றேன்.

பெரும்பான்மை சமூகத்திலும் சிறந்த மனிதர்கள் காணப்படுகன்றார்கள் என்பதை உதாரணமாக காட்டக் கூடிய ஒருவராக புத்தளம் பிரதேச சபையின் தலைவரான திலுக் பத்திரண இருந்துள்ளார் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் வெளியிட்டு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Published by

Leave a comment