-PMGG
காத்தான்குடி: 0779714728 என்ற கைத்தொலைபேசி இலக்கத்தில் இருந்து நாளை ஜும்மா தொழுகையின் பின் அண்மையில் பாலியல் சேஷ்டை விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட காத்தான்குடி நகர சபையின் ஆளும் தரப்பு உறுப்பினர் பாக்கீர் ஆசிரியருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்துக்கு அணி திரளுமாறு குறுந்தகவல் செய்தி ஒன்று இன்று நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் பெயரில் பரவலாக அனுப்பப்பட்டிருந்தது.
இந்த குருஞ்செய்திக்கும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என உத்தியோகபூர்வமாக PMGG தெரிவித்துக் கொள்கின்றது.
இந்த குறுஞ்செய்தி தொடர்பாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான அஷ்ஷெய்க் ALM. சபீல் (நளீமி) காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று பிற்பகல் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தார்.
இந்த முறைப்பாட்டில் மேற்படி குறுந்தகவல் அனுப்பிய நபரை பொலிசார் உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென தெரிவித்திருந்தார்.
இதேவேளை மேற்படி பாக்கீர் ஆசிரியரின் விவகாரம் நடந்த தினத்திலிருந்து நல்லாட்சிக்கான மக்கள் இயத்தினைத் தொடர்பு படுத்தி மேற்கொள்ளப்பட்டு வந்த பல்வேறு வகையான முன்னெடுப்புக்களில் இதுவும் ஒன்றாக இருக்கக்கூடும் என இயக்கத்தின் சூறாசபை கருதுகின்ற நிலையில் மேற்படி விவகாரத்தினைத் திசை திருப்புவதற்கான ஒரு முயற்சியாகவும் இருக்கக்கூடும் எனவும் சந்தேகிக்கின்றது.
Leave a comment