Author: yourkattankudy.com
-
பாடசாலை இலவச சீருடைக்குப் பதிலாக வழங்கப்படவுள்ள சீருடை வவுச்சர்களின் விபரம்
கொழும்பு: டிசம்பர் 1 ஆம் திகதி சகல பாடசாலை அதிபர்களுக்கு இந்த வவுச்சர்கள் வழங்கி பாடசாலை வகுப்பாசிரியர்கள் ஊடாகச் சென்று மாணவர்களுக்கு சென்றடையும். தமது பிரதேசத்தில் வலயக் கல்விப் பணிப்பாளரினால் பதிவு செய்யப்பட்ட புடவைக் கடைகளில் சீருடைகளை கொள்முதல் செய்ய முடியும். மிகுதி பணத்திற்கும் தமக்குத் தேவையான காலணி, பெனியன்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.
-
வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது
கொழும்பு: வளிமண்டல குழப்ப நிலை காரணமாக வட கிழக்கு பிரதேசத்தில் மழைக்கான காலநிலை காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இதனால் வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்பதோடு, வானம் முகில்களால் நிறைந்து காணப்படும்.
-
“திவிநெகும உத்தியோகத்தர்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம்”-ஜகத் குமார
எம்.எச்.எம். அன்வர் ஓட்டமாவடி: திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம் இவ்வாறு அகில இலங்கை சமுர்த்தி மற்றும் விவசாய உத்தியோகத்தர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜகத் குமார தெரிவித்தார். ஓட்டமாவடி நகர மண்டபத்தில் திவிநெகும உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த மாநாடு 26.11.2015 அன்று சங்கத்தின் மாவட்ட தலைவர் என் ரவீந்திர குமார் தலைமையில் இடம்பெற்றது.
-
கொழும்பில் பலஸ்தீன் ஒருமைப்பாட்டு தின நிகழ்வு
கொழும்பு: சர்வதேச பலஸ்தீன் ஒருமைப்பாட்டு தினம் வருடாந்தம் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கொழும்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் இஸ்ரேலிய முன்னாள் ஜெனரல் ஒருவரின் மகனான பிரபல பேச்சாளர் மிகோ பெலட் சிறப்பு பேச்சாளராக பங்கேற்கவுள்ளார்.
-
சம்மேளனத்தின் அந்தரங்கம் வெளிக்கொண்டுவரப்படும் நேரம் இது….
எஸ். எம். சித்தீக் காத்தான்குடி: பல சர்ச்சைகளும், மார்க்க விரோதச் செயற்பாடுகளும் காத்தான்குடியில் எழுந்திருந்த நேரங்களிலெல்லாம் வாய் மூடி மௌனித்திருந்த காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், தற்போது குறித்த ஓர் விடயத்துக்கு மாத்திரம் விளித்திருப்பதானது ஊருக்கு மிக மிக “நல்லது” என ஊர்மக்கள் பேசிக்கொள்கின்றனர்.
-
அபுதாபியில் இஸ்ரேலிய ராஜிய அலுவலகம் திறக்கப்படுகிறது!!
அபுதாபி: வரும் வாரங்களில், ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் ஒரு ராஜீய அலுவலகம் ஒன்றைத் திறக்க உத்தேசித்திருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே ராஜீய உறவுகள் இல்லாத நிலையிலும் இந்த அலுவலகம் திறக்கப்படவிருக்கிறது. இந்த அலுவலகத்தில் அபுதாபியில் உள்ள புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் ஒரு ராஜீய அலுவலர் மட்டும் இருப்பார்.
-
வாஸ் குணவர்தன, மகன் மற்றும் நால்வருக்கு மரணத் தண்டனை
கொழும்பு: பிரபல வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன, அவருடைய மகன் மற்றும் நான்கு நபர்களுக்கு உயர் நீதிமன்றம் மரணத் தண்டனை விதித்துள்ளது. வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை தொடர்பில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன மற்றும் அவரது புதல்வர் ரவிந்து குணவர்த்தன, நான்கு பொலிஸ் கான்ஸ்டபில்களுக்கு எதிராக
-
சமந்தாவின் ‘பவர்’
ரஸீன் ரஸ்மின் மன்னார்: ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் இலங்கைக்கு வந்த போது இரு முஸ்லிம் அமைச்சர்கள் அரசாங்கம் பற்றி குறித்த தூதுவரிடம் போட்டுக்கொடுத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டுக்கள் இணையத்தளங்கள், சமூக வளைத்தளங்கள் ஊடாக வளம் வந்துகொண்டிருந்தமையை நான் சொல்லி நீங்கள் புரிய வேண்டியதில்லை.
-
ஜேர்மன் நாட்டுக்கான உயர் ஸ்தானிகர்,விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸூக்குமிடையே சந்திப்பு
ஹாசிப் யாஸீன் கொழும்பு: ஜேர்மன் நாட்டுக்கான உயர் ஸ்தானிகர் கலாநிதி ஜேர்ஹன் மொர்ஹார்ட் மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸூக்குமிடையேயான சந்திப்பு இன்று (27) வெள்ளிக்கிழமை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் காரியாலயத்தில் இடம்பெற்றது.இச்சந்திப்பில் வெளிநாட்டு வர்த்தக முதலீட்டாளர்களுக்கான திட்ட நிபுணர் றிப்தி மொஹமட் மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் எச்.எம்.அப்துல் ஹையும் கலந்து கொண்டனர்.
-
KCDA யினால் அல்-ஹிதாயா மகா வித்தியாலய கணித, விஞ்ஞானப்பிரிவுக்கு நிதி கையளிப்பு
மீராவோடை: மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின், கோறளைப்பற்று மேற்கு கோட்டத்திற்குட்பட்ட மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் 2013ஆம்ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கணித, விஞ்ஞானப்பிரிவுகளில் க.பொ.த. உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக BCAS CAMPUS கல்வி நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளரும், பொறியியலாளருமான M.M. அப்துர் ரஹ்மான் (BSc. Eng.) அவர்களிடம்
-
“மதத்தால் இஸ்லாமியன் நான் என்ற போதும் எனது பணி சகல சமூகத்திற்கும் உரியது”: பாராளுமன்றத்தில் அமைச்சர் றிசாத்
தொகுப்பு- அபூ அஸ்ஜத் கொழும்பு: தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள பற்றினை விட நான் அம்மக்கள் மீது கொண்டுள்ள பற்று பன்மடங்கானது.மதத்தால் இஸ்லாமியனாக இருந்த போதும்எனது பதவியினை கொண்டு சகல மக்களுக்கும் பணியாற்றிவருகின்றேன் என்று தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்த சபையில் சில தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இனவாத கருத்துக்களை கூறிவருகின்றனர்.
-
வடமாகாண கல்வி அமைச்சர் செயலகம் விடுக்கும் விசேட அறிவித்தல்
கரீம் ஏ. மிஸ்காத் யாழ்ப்பாணம்: கோண்டாவிலில் புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரிழந்த கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் இ.செந்தூரனுக்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக வடக்கு பாடசாலைகள் அனைத்துக்கும் இன்று (27) வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.