அபுதாபி: வரும் வாரங்களில், ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் ஒரு ராஜீய அலுவலகம் ஒன்றைத் திறக்க உத்தேசித்திருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே ராஜீய உறவுகள் இல்லாத நிலையிலும் இந்த அலுவலகம் திறக்கப்படவிருக்கிறது. இந்த அலுவலகத்தில் அபுதாபியில் உள்ள புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் ஒரு ராஜீய அலுவலர் மட்டும் இருப்பார்.
இது இந்த எமிரேட் அரசுக்கான ஒரு தூதரக அலுவலகமாக இயங்காது. ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் திறக்கப்படும் முதல் வெளிப்படையான, அதிகாரபூர்வமான இஸ்ரேலிய அலுவலகம் இதுவாகத்தான் இருக்கும் என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.
பலத்தீனர்களுக்கு வளைகுடா நாடுகள் தெரிவித்து வரும் பலமான ஆதரவு காரணமாக, இஸ்ரேலுக்கும் மற்ற வளைகுடா அரபு நாடுகளுக்குமிடையே, முறையான ராஜீய உறவுகள் இல்லாவிட்டாலும், வெளியே தெரியாத அமைதியான வர்த்தக உறவுகள் அவ்வப்போது நிலவி வருகின்றன.

Leave a comment