KCDA யினால் அல்-ஹிதாயா மகா வித்தியாலய கணித, விஞ்ஞானப்பிரிவுக்கு நிதி கையளிப்பு

kcdaமீராவோடை: மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின், கோறளைப்பற்று மேற்கு கோட்டத்திற்குட்பட்ட மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் 2013ஆம்ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கணித, விஞ்ஞானப்பிரிவுகளில் க.பொ.த. உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக BCAS CAMPUS கல்வி நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளரும், பொறியியலாளருமான M.M. அப்துர் ரஹ்மான் (BSc. Eng.) அவர்களிடம்

KCDA முன்வைத்த கோரிக்கைக்கமைவாக தனது சொந்த நிதியிலிருந்து குறிப்பிட்ட சிறு தொகை பணத்தினை மாதாந்த சந்தாவாக வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

kcda

அதற்கமைவாக இந்நிதி கையளிக்கும் நிகழ்வு 2015.11.27ஆந்திகதி வெள்ளிக்கிழமை மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் அதிபர் ஜனாப். A.L. அபுல் ஹசன், பிரதி அதிபரும், மீராவோடை கல்வி அபிவிருத்தி வட்டத்தின் தவைலரும் மற்றும் KCDA யின் தலைவருமான ஜனாப் A.M. அன்வர் ஆகியோரிடம் கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் பொருளாளர் ஜனாப். K.R.M. றாஸி செயலாளர் M.T. ஹைதர் அலி ஆகியோரினால் BCAS CAMPS கல்வி நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளரும், பொறியியலாளருமான M.M. அப்துர் ரஹ்மான் (BSc. Eng.) அவர்களின் சார்பாக நிதி கையளிக்கப்பட்டது.

  • KCDA
    ஊடகப்பிரிவு

Published by

Leave a comment