Author: yourkattankudy.com
-
வெளிநாடு செல்லும் நண்பர்களுக்கான அறிவித்தல்
கொழும்பு: நீங்கள் வெளிநாடு செல்ல இருந்தால், Bureau இல் ரூபாய் 5887 செலுத்தி பதிவு செய்ய வேண்டும், அத்துடன் (Agreement paper) ஒப்பந்தப் படிவம் ஒன்று தேவை (Agreement paper) இருப்போருக்கு மொத்தம் 5887 ரூபாய் மாத்திரம் செலுத்த வேண்டும் அதற்கு முன் (Agreement paper) ஐ கொழும்பில் உள்ள வெளி நாட்டு வேலைவாய்ப்பு SLBFE இல் பதிவு செய வேண்டும்.
-
பாதை மாறிப் பயணிக்கிறதா நல்லாட்சி அரசு
ரஸீன் ரஸ்மின் கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று ஒத்து மந்திரங்கள் ஓதிய பல கட்சிகள் இன்று ஒவ்வொன்றும் நல்லாட்சி அரசுடன் முரண்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் தமிழ் தேசியக்கூட்டமைப்பும், மறுபக்கத்தில் ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் அமைச்சர்களும் ஒருவருக்கொருவர் முரண்பட்டுக்கொண்டு நல்லாட்சி அரசுக்கு தலைவலியைக் கொடுத்து வருகின்றனர்.
-
பிரஸ்ஸல்ஸ் நகரம் முடக்கம்
பிரஸ்ஸல்ஸ்: பெல்ஜியத்தில் காவல்துறையினர் தொடர்ந்தும் தேடுதலில் ஈடுபட்டுவருகின்றனர். ஆனால், பரிஸ் தாக்குதல்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான சலா அப்தஸ்லாம் இன்னும் சிக்கவில்லை.பிரஸ்ஸல்ஸ் நகரில் தாக்குதல்கள் நடக்கக்கூடும் என்ற எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு கடைகளும் பள்ளிக்கூடங்களும் நகர போக்குவரத்து கட்டமைப்பும் இன்றும் இயங்கவில்லை.
-
பொத்துவில் ஆசிரியர்கள் எவரும் உள்ளீர்க்கப்படவில்லை: இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கண்டனம்
கரீம் ஏ. மிஸ்காத் பொத்துவில்: மீளமைக்கப்பட்ட இலங்கை ஆசிரியர் சேவைக்கு 2015.11.22 உடன் ஒருவருடமும் ஒரு மாதமும் பூர்த்தியாகின்றது. ஆனால் இதுவரைக்கும் பொத்துவில் கல்விக் கோட்டப் பாடசாலை ஆசிரியர்கள் ஒருவருக்கும் உள்ளீர்ப்புக் கடிதங்கள் கிடைக்கப்பெறவில்லை என அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்றத்தில் குழப்பம்!
கொழும்பு: கடந்த வெள்ளிக்கிழமை (20) வாசிக்கப்பட்ட வரவு செலவு திட்ட பிரேரணைகளை உள்ளடக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட வரவு செலவு பிரதிகள் தொடர்பில் பாராளுமன்றில் குழப்பகரமான நிலைய உருவாகியது. ஆரம்பத்தில் வழங்கப்பட்ட பிரதிகளுக்கு பதிலாக மற்றுமொரு பிரதி வழங்கியதாக தெரிவித்த எதிர்க்கட்சியினர், வரவு செலவு திட்டத்தில் எத்தனை உரைகள் சமர்ப்பிக்கப்பட்டன, ஏன் இவ்வாறான மாற்றம் என கூச்சலிட்டனர்.
-
மத்திய கிழக்கில் விமான சேவைகள் பாதிப்பு
டமஸ்கஸ்: சிரியாவில் ஆயுததாரிகளுக்கு எதிராக ரஷ்யா மேற்கொண்டுவரும் ஏவுகணைத் தாக்குதல்கள் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. வடக்கு ஈராக்கில் உள்ள விமானநிலையங்கள் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன.
-
கேஸ் விலை குறைந்தது
கொழும்பு: கடந்த வாரம் வாசிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கமைய லிட்ரோ சமயல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இன்று (23) முதல் அமுலாகும் வகையில் குறித்த விலைகள் குறைக்கப்படுவதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
-
முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகள்; சமந்தாவிடம் கையளித்தார் ரிசாத்
ஏ.எச்.எம். பூமுதீன் கொழும்பு: இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றம் தொடர்பான உள்ளக விசாரணையினை 1985ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என அ.இ.ம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவரிடமே ரிசாத் பதியுதீன் நேற்று இந்த வேண்டுகோள் பத்திரத்தை கையளித்தார்.
-
கொடிது கொடிது அடுத்தவர் உழைப்பை சூறையாடல் கொடிது..!
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் ஒருவர் தனது பிறப்புரிமையால் பெற்றுக் கொள்ளும் சொத்துக்கள், செல்வங்கள் மற்றும் தனது உழைப்பினால் பெற்றுக் கொள்ளும் செல்வங்கள் என தன்னிடமுள்ள அசையும் அசையா சொத்துக்கள், வளரும் வளரா சொத்துக்கள் என்பவற்றை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு ஸகாத், சதகா போன்ற கடமையான மற்றும் விரும்பத் தக்க நற்கருமங்கள் சொல்லித் தரப்பட்டுள்ளன.
-
மஸ்ஜிதுல் சுஹதா பள்ளிவாயலின் மலசலகூட மற்றும் வுழுஹ் செய்யும் தொகுதியின் நிர்மாணப் பணிக்கு உதவி கோரல்
காத்தான்குடி: காத்தான்குடி -03 பொதுமைதான வீதியில் அமைந்திருக்கும் மஸ்ஜிதுல் சுஹதா பள்ளிவாயல் கடந்த 25 வருடகாலமாக மிகவும் பழமையான கட்டிடத்தில் அமையப் பெற்று அண்மையில் பள்ளிவாயலைச் சூழவுள்ள ஜமாஆத்தர்களினாலும் இவ்வூரின் தனவந்தர்களினாலும் அழகுற நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
-
அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் பிரதேச அபிவிருத்திற்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் நிதி ஒதுக்கீடு
ஹாசிப் யாஸீன் அட்டாளைச்சேனை: அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்திற்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், 1 கோடி 15 லட்சம் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில் தெரிவித்தார்.
-
ஒஸா வினது ஐந்தாவது ஆண்டு பூர்த்தியினை முன்னிட்டு- கவிதைப் போட்டி
காத்தான்குடி: எமது சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பு (OSA-ஒஸா) பல்வேறுபட்ட சமூக துயர் துடைப்பு பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றது. எமது அமைப்பினது ஐந்தாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு, காத்தான்குடி இளங் கவிஞர்களை ஊக்குவிக்குமுகமாக கவிதைப் போட்டி ஒன்றினை நடாத்தவுள்ளது. கடந்த 5 வருடங்களுக்குள் எமது இலக்கியம் தொடர்பான மதிப்பீட்டின் அடிப்படையில் விரல் விட்டு எண்ணும் விலாசங்களே மின்னுகின்றன.