- எஸ். எம். சித்தீக்
காத்தான்குடி: பல சர்ச்சைகளும், மார்க்க விரோதச் செயற்பாடுகளும் காத்தான்குடியில் எழுந்திருந்த நேரங்களிலெல்லாம் வாய் மூடி மௌனித்திருந்த காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், தற்போது குறித்த ஓர் விடயத்துக்கு மாத்திரம் விளித்திருப்பதானது ஊருக்கு மிக மிக “நல்லது” என ஊர்மக்கள் பேசிக்கொள்கின்றனர்.
குறிப்பாக 2000ம் ஆண்டுகளின் பின்னர் காத்தான்குடி சம்மேளனம் செல்லாக்காசானது. எப்போது அரசியல், சம்மேளனத்தை வாங்கிக்கொண்டதோ அன்றிலிருந்து சம்மேளனத்திற்கு மதிப்பென்பது ஊரில் தேடவேண்டியுள்ளது.
அரசியலால் மூடி மறைக்கப்பட்டு வந்த சம்மேளனத்தின் இயலாமையும், சம்மேளன உறுப்பினர்களின் சமூக, மார்க்க விரோதச் செயல்களும் எதிர்காலத்தில் காற்றில் பறக்கவிடப்படும் அச்சம் இருப்பதாக மக்கள் பேசிக்கொள்கின்றனர்.
Leave a comment