Author: yourkattankudy.com
-
இந்தியா: “தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காதது குற்றமல்ல”
டெல்லி: இந்தியாவில் திரையரங்கு ஒன்றில் தேசிய கீதம் பாடப்பட்டுக்கொண்டிருக்கும்போது எழுந்து நிற்க மறுத்த ஒரு குடும்பத்தினரை, மற்றவர்கள் திரையரங்கிலிருந்து வெளியேற்றியதாக வந்த ஒரு காணொளி, தேசிய கீதம் பாடப்படும்போது எழுந்து நிற்பது சட்டரீதியாக கட்டாயமானதா என்ற கேள்வியை பலரது மனதில் எழுப்பியிருக்கிறது.
-
இந்திய தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காத முஸ்லிம் குடும்பம் மும்பை தியேட்டரிலிருந்து வெளியேற்றப்பட்டதா? (காணொளி)
AF-90 மும்பை: திரையரங்கில் தேசிய கீதம் ஒலிபரப்பும்போது இருக்கையை விட்டு எழுந்து நிற்காத முஸ்லிம் குடும்பம் வெளியேற்றப்பட்டதாக உலவும் ஒரு வீடியோ காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய கீதம் இசைக்கப்படும்போது, எழுந்து நிற்பது என்பது தேசத்துக்கு கொடுக்கும் மரியாதையாக பார்க்கப்படுகிறது. தென் இந்தியாவில் இதுபற்றி பெரிய அளவுக்கு விவாதங்கள் வந்ததில்லை என்ற போதிலும், வட இந்தியர்கள், இப்படி எழுந்து நிற்பதை கடமையாக வைத்துள்ளனர்.
-
உருவாகிறது புதிய அரசாங்கம்..?
கொழும்பு: ஐக்கிய தேசிய கட்சியின் பிரபல அமைச்சர் ஒருவர் புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் மிகவும் இரகசியமாக கலந்துரையாடல்கள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசிய கட்சியின் பிரபல அமைச்சர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட பகைமையான தன்மை காரணமாக ஒரு அமைச்சர் இவ்வாறு வேறு நபர்களுடன் இணைந்து கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார்.
-
உள்ளக வீதி புனரமைப்புக்கான அடிக்கல் நட்டி வைப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: தேசிய கொள்கைத் திட்டமிடல் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கிவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 2015 இளைஞர் பாராளுமன்றத்திற்கு இணையாக “துருனு சிரம சக்தி” தேசிய கிராம அபிவிருத்தி வேளைத்திட்டத்தின் கீழ் சுமார் 1 ஒரு இலட்சம் ரூபா செலவில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி-02 166கிராம சேவகர் பிரிவிலுள்ள தஜ்வீத் கலாசாலை வீதியின் 4ம் குறுக்கு உள்ளக வீதி புனரமைப்பு செய்யப்படவுள்ளது.
-
வீதியின் நடுவே அமைக்கப்பட்டுள்ள வடிகான்களில் மூடிகள் சேதம்- சம்மந்தப்பட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி அறபுக் கலாசாலை வீதியின் நடுவே அமைக்கப்பட்டுள்ள வடிகான்களில் சில மூடிகள் கடந்த சில மாதங்களாக சேதமடைந்து குன்றும் குழியுமாக காணப்படுவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதனால் இவ் வீதியில் பயணம் பொது மக்கள்,பாடசாலை மாணவர்கள்,அறபுக் கலாசாலை மாணவர்கள் மிகவும் அவஸ்தைப் படுகின்றனர்.
-
பாடசாலை மாணவர்களுக்கு மஞ்சல் கடவை உட்பட மோட்டார் வாகன போக்குவரத்துச் சட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் செயலமர்வு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்ட காத்தான்குடி அந் நாஸர் வித்தியாலத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களை வீதி விபத்தில் இருந்து தடுக்கும் நோக்கில் பாடசாலை மாணவர்களுக்கு மஞ்சல் கடவை உட்பட மோட்டார் வாகன போக்குவரத்துச் சட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் செயலமர்வு 29-11-2014 நேற்று ஞாயிற்றுக்கிழமை அந் நாஸர் வித்தியாலத்தின் தொழினுட்ப ஆய்வு கூடத்தில் இடம்பெற்றது.
-
சம்மேளனம், ஜம்மிய்யா: ஏன் இந்த மௌனம்….???
அண்மை காலமாக எமது காத்தான்குடியில் இடம் பெற்றுவரும் கலாச்சார சீர்கேடுகள் மற்றும் மார்க்க விழுமியங்கள் மீரப்படுவது தொடர்பிலும் எமது சகோதரிகளின் பாதுகாப்பு தொடர்பிலான கடிதமொன்று 19/11/2015 ம் திகதி வியாழக்கிழமை காத்தான்குடி பள்ளிவயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி ஜம் இய்யதுல் உலமா சபை ஆகிய நிறுவனங்களுக்கு என்னால் அனுப்பி வைக்கப்பட்டது.
-
அமானுல்லாஹ் வீதியின் பரிதாப நிலை
மெளலவி. மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி) காத்தான்குடி: காத்தான்குடி-6, அமானுல்லாஹ் வீதியின் பரிதாப நிலையையே படத்தில் கான்கின்றீர்கள். பொதுமக்கள், பாதசாரிகள், பாடசாலை மாணவர்கள் எனபலரும் பயன்பாடுத்தும் இவ்வீதி, இப்பகுதி மக்களின் பாவனைக்கு மிக அவசியமான போக்குவரத்துப் பாதையாக உள்ளது.
-
தேர்தல் பிரச்சாரத்தில் சவுதி பெண்கள்
றியாத்: சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளை அந்நாட்டு பெண்கள் முதன் முறையாக ஆரம்பிதுள்ளனர்.அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்த தேர்தலில், சுமார் 900 பெண்கள் போட்டியிடுகின்றனர். மக்கள் பிரதிநிதிகளை தேர்தெடுக்கும் தேர்தல் ஒன்றில் சவுதியில் பெண்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
-
கட்டார் விபத்து: கவலைக்கிடமான நிலையில் சகோதரர் றிகாஸ்
டோஹா: கட்டாரில் கார் விபத்தில் காயமடைந்த முகம்மட் றிகாஸ் எனும் சகோதரரின் நிலை கவலைக்கிடமாக இருக்கின்றது. குறித்த சகோதரர் விரைவில் குணமடைய அல்லாஹ்விடம் பிராத்திக்குமாரு அவரது உறவினர்களும் நண்பர்களும் எமது வாசகர்களைக் கேட்டுக்கொள்கின்றனர்.
-
மௌலவி ஸஹ்றானைச் சூழப்பட்டுள்ள கருப்பு வட்டம்
இர்ஷாட் ஏ. காதர் காத்தான்குடி: தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் பிரதம பேச்சாளர் எம்.சி.எம். ஸஹ்றான் மௌலவியையும் அதன் அமைப்பையும் சுற்றி காத்தான்குடியின் சமய, மற்றும் சமூக நிறுவனங்கள் ஒன்றிணைந்து பாரிய கறுப்பு வட்டம் ஒன்றை நேரடியாகவும் மறைமுகமாகவும் சூழ்ந்திருக்கின்றனர்.