வாஸ் குணவர்தன, மகன் மற்றும் நால்வருக்கு மரணத் தண்டனை

shiyam caseகொழும்பு: பிரபல வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன, அவருடைய மகன் மற்றும் நான்கு நபர்களுக்கு உயர் நீதிமன்றம் மரணத் தண்டனை விதித்துள்ளது. வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை தொடர்பில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன மற்றும் அவரது புதல்வர் ரவிந்து குணவர்த்தன, நான்கு பொலிஸ் கான்ஸ்டபில்களுக்கு எதிராக

தொடரப்பட்டிருந்த வழக்கு விசாரணையின் இறுதி தீர்ப்பு இன்று கொழும்பு உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட போதே நீதிமன்றம் மேற்படி தீர்ப்பை வழங்கியது.

இந்த கொலை வழக்கின் தீர்ப்பு இன்றைய தினம் அறிவிக்கப்படும் என்று கொழும்பு உயர் நீதிமன்றம் கடந்த ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி அறிவித்திருந்ததோடு இந்த வழக்கின் தீர்ப்பு 802 பக்கங்களைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

shiyam case

Published by

Leave a comment