“திவிநெகும உத்தியோகத்தர்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம்”-ஜகத் குமார

  • எம்.எச்.எம். அன்வர்

divinegumaஓட்டமாவடி: திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம் இவ்வாறு அகில இலங்கை சமுர்த்தி மற்றும் விவசாய உத்தியோகத்தர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜகத் குமார தெரிவித்தார். ஓட்டமாவடி நகர மண்டபத்தில் திவிநெகும உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த மாநாடு 26.11.2015 அன்று சங்கத்தின் மாவட்ட தலைவர் என் ரவீந்திர குமார் தலைமையில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட திவிநெகும பணிப்பாளர் திரு பி குணரெத்தினம், சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஐயூப்கான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

செயலாளர் மேலும் தனதுரையில்,

அண்மைக்காலங்களில் சமுர்தித் திட்டத்திற்கும் சமுர்த்தி பயனாளிகளுக்கும் மற்றும் உத்தியோகத்தர்களுக்கும் பாரிய அநீதி இடம்பெறவிருந்தது. அப்போது அமைச்சராக இருந்தவர் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாசவாகும். இது சரியான முறையில் கொண்டு செல்லவேண்டும் என்ற நோக்கில் வழக்கு தாக்கல் செய்தோம்.

divineguma

அத்துடன் யார் அமைச்சராக வந்தாலும் சமுர்த்தி திட்டத்திற்கு அநீதி இழைக்கப்படுமாயின் அதனை பார்த்துக்கொண்டு எமது சங்கம் சும்மா இருக்க முடியாது.

ஆரம்ப காலத்தில் 1945 ரூபா சம்பளமாக பெற்ற எமது சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தற்போது கணிசமான சம்பளங்களை பெறுகின்றனர். இவர்களுக்கான பதவியுயர்வுகள் காகிதாதிகள் காரியாலய வாடகை பிரயாணக்கொடுப்பனவு போன்ற அனைத்து வசதிகளையும் பெற எமது சங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ளது.

எமது தொழிற்சங்கமானது கடந்த காலங்களில் இவற்றினை பெற்றுக்கொள்ள பாரிய போராட்டங்கள் சத்தியாக்கிரகங்களை நடாத்தியே பெற்றுக்கொண்டுள்ளது. எனவே மேற்படி அகில இலங்கை சமுரத்தி மற்றும் விவசாய உத்தியோகத்தர் சங்கத்திற்கு பூரண ஒத்துழைப்பினை எதிர்காலத்தில் வழங்குவீர்கள் என நம்புகிறேன் இவ்வாறு தனதுரையில் மேலும் தெரிவித்தார்.

Published by

Leave a comment