Author: yourkattankudy.com
-
உம்ரா விஸாவுக்கான கால எல்லை கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுல்: 14 தினங்கள் மட்டுமே தங்குவதற்கு அனுமதி!
கொழும்பு: உம்ரா விசா காலாவதியாகும் காலம் 14 தினங்களுக்கு மட்டுப்படுத்த சவூதி அரேபிய ஹஜ் அமைச்சு தீர்மானித்துள்ளது. புனித மக்கா ஹரம் பள்ளிவாசலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாலேயே இந்த கட்டு ப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
உயிரிழந்த மீனவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரிப்பு: மேலும் 29 பேரை காணவில்லை! 37 படகுகளும் மாயம்!!
கொழும்பு: சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட கடும் காற்றினால் உயிரிழந்த மீனவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது. இந்தச் சம்பவத்தினால் 37 மீன்பிடி படகுகளும் 32 மீனவர்களும் காணாமல் போயுள்ளதாக கடற்றொழில் நீரக வள மூலங்கள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரட்ன தெரிவித்தார். திடீரென வீசிய கடுமையான காற்றினால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக 35 மீனவர்கள் காயமடைந்துள்ளதுடன், 14 படகுகள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
-
லண்டன் தாருள் உழூம் பாடசாலைக்கு தீ வைப்பு: பொலிஸார் உசார் நிலையில்! தொடரும் அச்சங்கள்..
-MJ லண்டன்: நேற்று முன் தினம் சனிக்கிழமை இரவு தென்கிழக்கு லண்டனில் ‘சைலர்ஸ்ட்’ எனும் இடத்தில் அமைந்துள்ள தாருள் உழூம் இஸ்லாமிய பாடசாலைக்கு இனந்தெரியாதவர்களால் தீவைக்கப்பட்டது.
-
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுடன் பத்திரிகையாளர் சந்திப்பு – ஒலி வடிவம்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வெள்ளிக்கிழமை காலை காத்தான்குடியிலுள்ள அவரது அலுவலகத்தில்
-
‘நன்மை செய்யும் சமூகமே வெற்றி பெறும் சமூகம்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இஜ்திமா நிகழ்வின் முழு ஒலிப்பதிவு
பழுலுல்லாஹ் பர்ஹான் பாலமுனை: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி உப பிராந்தியத்தின் ஏற்பாட்டில் ‘நன்மை செய்யும் சமூகமே வெற்றி பெறும் சமூகம்’ எனும் தொனிப்பொருளில்
-
காத்தான்குடி ஜமாஅத்தே இஸ்லாமியின் இஜ்திமா (ஒலிவடிவம் )
முஹம்மட் தல்ஹா பாலமுனை: பாலமுனை முஹைதீன் ஜும்ஆப்பள்ளி வாயலில் இடம்பெற்ற ஜமாஅத்தே இஸ்லாமியின் பிராந்திய இஜ்திமாவில் இடம்பெற்ற ‘மனித சமூகத்தின் ஆக்கமும் அழிவும்’
-
புதினப் பத்திரிகை ஏற்றி வந்த லொறி விபத்து- நால்வர் காயம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கொழும்பிலிருந்து காத்தான்குடிக்கு புதினப் பத்திரிகை ஏற்றி வந்த காத்தான்குடி லொறியொன்று (படி) விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த நால்வர் காயத்திற்குள்ளாகி தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
ரிசானாவை சவூதிக்கு அனுப்பிய முகவர் நிலையம் வேறு பெயரில் பதிவதற்கு முயற்சி!
கொழும்பு: சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கை போலி ஆவணங்கள் மூலம் அந்நாட்டிற்கு அனுப்பியதாகக் கூறப்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் தற்போது வேறு ஒரு பெயரில் பதிவு செய்ய முற்பட்டபோது கண்டு பிடிக்கப்பட்டதாக அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
-
மார்க்க முரண்பாடுகளைக் கடந்து பதுரிய்யா ஜூம்ஆ பள்ளிவாயலில் மிக விமர்சையாக இடம்பெற்ற 36வது புகாரி கந்தூரி!
– சுபானி றிபாயி காத்தான்குடி: காத்தான்குடி 05 பத்ரீயா ஜூம்மாப்பள்ளி வாயளில் கடந்த வியாழன் இரவு புனித ஷஹீஹுல் புஹாரி தமாம் நிகழ்வு சங்கைக்குரிய உலமாஉகளினால் மிக விமர்சையாக இடம்பெற்றது.
-
கடும் காற்று, கடல் கொந்தளிப்பு! மீனவர்கள் பலரைக் காணவில்லை
கொழும்பு: தெற்கு மற்றும் மேல் மாகாணத்தில் நேற்று நள்ளிரவு முதல் திடீரென நிலவிய கடும் காற்றுடனான காலநிலை காரணமாக மூன்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் உயிரிழந்ததுடன், 20ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சுமார் 30 வள்ளங்கள் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவில் விசக்கடிதங்கள்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய நடிகையை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அதிபர் ஒபாமா வசிக்கும் வெள்ளை மாளிகைக்கு தினசரி ஏராளமான கடிதங்கள் வருகின்றன. அவற்றை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்திய பிறகே அதிபரின் பார்வைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
-
மீள்குடியேற்றக் கிராமமான சிகரத்தில் 35 தமிழ் முஸ்லிம் வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட மீள்குடியேற்றக் கிராமமான சிகரம் கிராமத்திலுள்ள வறிய மாணவர்களுக்கு; சிகரம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினால் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை சிகரம் ஜும்ஆ பள்ளிவாயல் தலைவர் எம்.வை.ஆதம் தலைமையில் நடைபெற்றது.