காத்தான்குடி: கொழும்பிலிருந்து காத்தான்குடிக்கு புதினப் பத்திரிகை ஏற்றி வந்த காத்தான்குடி லொறியொன்று (படி) விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த நால்வர் காயத்திற்குள்ளாகி தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 02.00 மணியளவில் தம்புள்ளைக்கும் ஹபரணைக்கும் இடையில் உள்ள பகுதியிலேயே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
லொறியின் டயர் வெடித்ததிலேயே குறித்த லொறி பிரண்டதாகவும் இதில் பயணித்த ஒருவருக்கு இரு கால்களும் பலமாக அடிபட்டதால் கால் உடைந்திருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுவதுடன் ஏனையோர்கள் காயமடைந்த நிலையில் நால்வரும் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பான விசாரணைகளை தம்புள்ளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்துக்குள்ளான குறித்த லொறி நவாஸ் ட்ரேடர்ஸுக்கு சொந்தமான லொறி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment