கொழும்பு: சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கை போலி ஆவணங்கள் மூலம் அந்நாட்டிற்கு அனுப்பியதாகக் கூறப்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் தற்போது வேறு ஒரு பெயரில் பதிவு செய்ய முற்பட்டபோது கண்டு பிடிக்கப்பட்டதாக அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
குறித்த முகவர் நிறுவனம் இரு வேறுபெயர்களில் செயற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை அடுத்து அது தொடர்பில் ஆராய்வதாக குறிப்பிட்ட அமைச்சர் டிலான் பெரேரா தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்றும் செய்தி வெளியிட்டுள்ளது.
மூதூரைச் சேர்ந்த ரிசானா நபீக்கிற்கு கடந்த ஜனவரி மாதம் 9ம் திகதி கழுத்து வெட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment