மார்க்க முரண்பாடுகளைக் கடந்து பதுரிய்யா ஜூம்ஆ பள்ளிவாயலில் மிக விமர்சையாக இடம்பெற்ற 36வது புகாரி கந்தூரி!

DSC05846– சுபானி றிபாயி

காத்தான்குடி: காத்தான்குடி 05 பத்ரீயா ஜூம்மாப்பள்ளி வாயளில் கடந்த வியாழன் இரவு புனித ஷஹீஹுல் புஹாரி தமாம் நிகழ்வு சங்கைக்குரிய உலமாஉகளினால் மிக விமர்சையாக இடம்பெற்றது.

கடந்த 07.05.2013 அன்று ஆரம்பிக்கப்பட்ட புனித புஹாரீ ஷரீப் 30 தினங்கள் ஓதப்பட்டு இறுதித்தினமான 05.06.2013 புதன்கிழமை நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

இப்புனித மஜ்லிஸில் மார்க்க முரண்பாடுகளைக் கடந்து, ஊரிலுள்ள உலமாகள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

வெகு விமர்சையாக  இடம்பெற்ற இந்நிகழ்வின் இறுதியில், சங்கைக்குரிய ஷெய்குணா அல் ஆலீம் கலாநிதி எ. ஜே .அப்துர் ரஊப் மிஷ்பாஹீ (பஹ்ஜி) அண்ணவர்களின் விசேட பாயான் நிகழ்வும் இடம் பெற்றதுடன், நார்ஸா வினியோகமும் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து சிறப்பித்து பரக்கத்தையும் பெற்றுச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து இம்மாதம் 26ம் திகதி ஆரம்பமாகும் 27வது வருட உர்ஸே முபாறக் – ஹாஜாஜீ மகாகந்தூரியும், 13வது மௌலவீ பாஸில் றப்பானீ பட்டமளிப்பு விழாவிற்கும் இலங்கை அரசியல் முக்கியஸ்தர்கள், உள்ளுர் அரசியல் பிரதிநிதிகள், காத்தான்குடி உலமாஉக்கள் உட்பட முஹித்தீன்கலும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment