மட்டக்களப்பு: மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட மீள்குடியேற்றக் கிராமமான சிகரம் கிராமத்திலுள்ள வறிய மாணவர்களுக்கு; சிகரம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினால் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை சிகரம் ஜும்ஆ பள்ளிவாயல் தலைவர் எம்.வை.ஆதம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கோயில்குளம் கிராமசேவை உத்தியோகத்தர் தர்மலிங்கம், மண்முனைப்பற்று பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் சாலினி இன்பராஜா (RDO), கதிப்மார் சம்மேளனத்தின் செயலாளரும் ஊடகவியலாளருமான எஸ்.எம்.எம்.முஸ்தபா மௌலவி, சமுர்த்தி உத்தியோகத்தர் எம்.எச்.எம்.தாஹிர், சிகரம் பெண்கள் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவி எம்.எஸ்.சியாமா மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது அதிதிகளினால் 35 தமிழ், முஸ்லிம் வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




Leave a comment