Month: May 2013
-
காபூலில் இந்தியத் தூதரகம் அருகே அடுத்தடுத்து 3 பயங்கர குண்டுவெடிப்புகள்: 45 பேர் பலி! 150 பேர் காயம்!!
– MJ காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்தியத் தூதரகம் அருகே அடுத்தடுத்து 3 பயங்கர குண்டுவெடிப்புகள் நடந்தன. தற்கொலைப் படை யினர் இத்தாக்குதலை நடாத்தி இருப்பதாக தெரியவருகிறது.இதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு தாக்குதலிலும் ஈடுபட்டனர்.
-
மட்டக்களப்பு நுழைவாயிலில் புத்த சிலை வைக்க எதிர்ப்பு
மட்டக்களப்பு: மட்டக்களப்பு நகரின் வடக்கு நுழைவாயில் நெடுஞ்சாலையோரத்தில் புத்தர் சிலை நிறுவுவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி குறித்து நகர மக்கள் பலரும் தமது கவலையை வெளியிட்டுள்ளார்கள்.
-
அல் மத்ரஸதுல் ஹூஸைனிய்யாவின் 08வது பரிசளிப்பு விழா-முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் அமீன், செயலாளர் நிலாம் பங்கேற்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி -1, அல் மத்ரஸதுல் ஹூஸைனிய்யாவின் 08வது பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை பிற்பகல் மஸ்ஜிதுல் ஹூஸைனிய்யா பள்ளிவாயல் மண்டபத்தில் அல் மஸ்ஜிதுல் ஹூஸைனிய்யா பள்ளிவாயல் தலைவர் எஸ்.ஏ.கே. பழீலுர் ரஹ்மான் ஜே.பி தலைமையில் இடம்பெற்றது.
-
ஐரோப்பா உதைப்பந்தாட்ட சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டி இன்று லண்டனில்
-MJ லண்டன்: ஐரோப்பிய உதைப்பந்தாட்ட சம்மேளனம் (UEFA) வருடா வருடம் ஐரோப்பாவின் கழகங்களுக்கிடையில் நடாத்தும் ஐரோப்பா சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப்போட்டி இன்று சனிக்கிழமை லண்டன் நேரப்படி மாலை 19:45 (இலங்கை நேரப்படி நள்ளிரவு 12:15) மணிக்கு லண்டன், வெம்ப்ளி மைதானத்தில் இடம்பெறுகிறது.
-
குவைத்தில் முதல் முறையாக கடிதம் எழுதும் போட்டி
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம.. குவைத்: கடிதம் (Letters) எனப்படுவது இருவருக்கிடையே இடம்பெறும் எழுத்து தகவல் பரிமாற்றத்தைக் குறிக்கின்றது. தமிழில் இதை அஞ்சல் என்றும் கூறுவர். தொடக்கத்தில் காகித வழி நேரடி பரிமாற்றமாக இருந்த இந்தத் தொடர்பு, இணையம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இணையம் ஊடாக மின்னஞ்சல் ஆகவும் வடிவெடுத்தது.
-
ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூக அமைப்பின் ஏற்பாட்டில் ‘மகப்பேறும் பெண் நோயியலும்’ எனும் தலைப்பில் கருத்தரங்கு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூக அமைப்பின் ஏற்பாட்டில் ‘மகப்பேறும் பெண் நோயியலும்’; எனும் தலைப்பில் கருத்தரங்கும் கேள்வி பதில் நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூக அமைப்பின் தலைவர் டாக்டர் ஹாதி தலைமையில் இடம்பெற்றது.
-
காத்தான்குடியில் தஹஜ்ஜூத் தொழுகைக்கான ‘அதான்’ இன்று முதல்ஆரம்பம்
– நமது நிருபர் காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், காத்தானகுடி ஜம்மியதுல் உலமா சபை ஆகியவற்றின் ஒருமித்தான தீர்மானத்தின் அடிப்படையில்
-
காத்தான்குடி தேசிய பாடசாலை மைதானத்தில் மாபெரும் கால்பந்தாட்டப் போட்டி
– டீன் பைரூஸ் காத்தான்குடி: மிக நீண்ட நாட்களின் பின்னர் காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய தேசிய பாடசாலை மைதானத்தில் சினேக பூர்வ உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி ஒன்று இன்று இடம் பெற்றது.
-
அவசர சமிக்ஞையைத் தொடர்ந்து பாதுகாப்பு ஜெட்விமானங்களுடன் லண்டனில் தரையிறக்கப்பட்ட பாகிஸ்தான் விமானம்!
-MJ லண்டன்: இன்று காலை பாகிஸ்தானின் தலைநகரான லாஹூரில் இருந்து உள்ளுர் நேரப்படி காலை 09:35 மணிக்கு, இங்கிலாந்து மன்செஸ்டர் விமான நிலையத்தை நோக்கி புறப்பட்ட விமானம், விமானிகளின் அவரச சமிக்ஞையை அடுத்து லண்டனில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
மிருகங்கள் கொல்லப்படுவதை எதிர்த்து பிக்கு தீக்குளிப்பு!
கண்டி: ஆடு, மாடுகள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் பிக்கு தன்மீது பெற்றோலை ஊற்றி எரித்துக்கொண்டுள்ளார்.மோசமான எரிகாயங்களுக்கு உள்ளான அவரை அருகில் நின்றவர்கள் கண்டி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
-
களம் இறங்க காத்திருக்கும் மட்டக்களப்பு மாவட்ட உதை பந்தாட்ட அணி
விசேட நிருபர்- மட்டக்களப்பு: இலங்கை கால் பந்தாட்ட சங்கம் (Football Federation of Sri Lanka) 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான உதை பந்தாட்டச் சுற்றுப் போட்டி ஒன்றினை அகில இலங்கை ரீதியாக நடாத்தி வருகின்றது.
-
மனிதாபிமான அபிவிருத்திக்கான இஸ்லாமிய அமைப்பு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதம்
– இர்ஷாட் ரஹ்மதுல்லா 2013.05.23 அதிமேதகு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி ஜனநாயக சோசலிச குடியரசு