லண்டன்: ஐரோப்பிய உதைப்பந்தாட்ட சம்மேளனம் (UEFA) வருடா வருடம் ஐரோப்பாவின் கழகங்களுக்கிடையில் நடாத்தும் ஐரோப்பா சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப்போட்டி இன்று சனிக்கிழமை லண்டன் நேரப்படி மாலை 19:45 (இலங்கை நேரப்படி நள்ளிரவு 12:15) மணிக்கு லண்டன், வெம்ப்ளி மைதானத்தில் இடம்பெறுகிறது.
இப்போட்டிக்கு இரு ஜேர்மனி கழகங்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன. அரையிறுதிப்போட்டியில் அபாரமாக ஆடிய இவ்விரு அணிகளும், பலம் பொருந்திய ஸ்பெய்னின் அணிகளான பார்சிலோனா, ரியல் மெட்ரிட் கழகங்களை இறுதிப்போட்டிக்கு வரமுடியாமல் வீட்டுக்கு அனுப்பியிருந்ததை இரசிகர்கள் மறந்திருக்கமாட்டார்கள்.
ஜெர்மனியின் முன்னணிக் கழகங்களான ‘பேயர்ன் மியூனிச்; மற்றும் ‘பொரஸ்ஸா டொர்ட்மண்ட்’ ஆகிய இரு அணிகளும் இன்று லண்டனில் இறுதிப்போட்டியில் சந்திக்கின்றன.
லண்டன் நகரம் ஜேர்மன் நாட்டு உதைப்பந்தாட்ட இரசிகர்களால் நிரம்பிவருவதைக் காணமுடிகிறது. கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து குளிரும், மழையும், கடும் காற்றுமாக மாறி இருக்கும் பிரித்தானியா காலநிலைக்கு மத்தியில், இரு கழகங்களின் இரசிகர்கள் மகிழ்ச்சி ஆராவாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐரோப்பா சம்பியன்ஸ் கிண்ணத்தை பேயர்ன் மியூனிச் கழகம் 1974, 1975, 1976 மற்றும் 2001 ஆகிய வருடங்களில் மொத்தம் 4 தடவைகள் வெற்றி பெற்றிருக்கின்றது. பொரஸ்ஸா டொர்ட்மண்ட் 1997ல் முதல் தடவையாக ஐரோப்பா சம்பியன் கிண்ணத்தை வெற்றிபெற்றிருந்தது.
இரு அணிகளிலும் ஜேர்மனி தேசிய அணியின் சிறந்த வீரர்களும், ஏனைய உலக நாடுகளின் சிறந்த வீரர்களும் விளையாடி வருகின்றனர்.
வெம்ப்ளி மைதானம் 90 ஆயிரம் பார்வையாளர்கள் கொள்ளளவைக் கொண்டது. இப்போட்டியை உலகிலுள்ள 170 மில்லியனுக்கும் அதிகமான இரசிகர்கள் நேரடி ஒளிபரப்பின் மூலம் காணவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![Borussia-Dortmund-vs-Bayern-Munich-Wallpaper[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/05/borussia-dortmund-vs-bayern-munich-wallpaper1.jpg?w=150&h=93)
![Borussia-Dortmund-vs-Bayern-Munich-Wallpaper[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/05/borussia-dortmund-vs-bayern-munich-wallpaper1.jpg?w=630&h=393)

![Borussia-Dortmund-vs-Bayern-Munich[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/05/borussia-dortmund-vs-bayern-munich1.jpg?w=630&h=393)
![1000x5801-e1369230553356[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/05/1000x5801-e13692305533561.jpg?w=630&h=362)
![UCLbrackets[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/05/uclbrackets1.png?w=630&h=312)
Leave a comment