காபூலில் இந்தியத் தூதரகம் அருகே அடுத்தடுத்து 3 பயங்கர குண்டுவெடிப்புகள்: 45 பேர் பலி! 150 பேர் காயம்!!

_44810333_kabul512[1]– MJ

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்தியத் தூதரகம் அருகே அடுத்தடுத்து 3 பயங்கர குண்டுவெடிப்புகள் நடந்தன. தற்கொலைப் படை யினர் இத்தாக்குதலை நடாத்தி இருப்பதாக தெரியவருகிறது.இதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு தாக்குதலிலும் ஈடுபட்டனர்.

மத்திய காபூல் பகுதியில் மிக பலத்த பாதுகாப்பு மிகுந்த பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலில் 45 பேர்  உயிரிழந்தனர். 150 பேர் வரையில் காயமடைந்திருக்கின்றனர். உயிரிழப்பு வீதம் மேலும் அதிகரிக்கலாம் என தெரியவருகிறது. அந்தப் பகுதியை ஆப்கானிஸ்தானின் ராணுவத்தினரும் பொலீசாரும் சுற்றி வளைத்துள்ளனர்.

குணடு வெடிப்பையடுத்து, தொடர்ந்து துப்பாக்கிச் சண்டைகள் நடந்துவருகின்றன. இந்தப் பகுதியில் தான் ஆப்கானிஸ்தான் மத்திய உளவுப் பிரிவின் மருத்துவமனையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

_44810333_kabul512[1]

Published by

Leave a comment