– இர்ஷாட் ரஹ்மதுல்லா
2013.05.23
அதிமேதகு மஹிந்த ராஜபக்ஷ
ஜனாதிபதி
ஜனநாயக சோசலிச குடியரசு
அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு,
நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து இலங்கை தேசத்தில் வாழும் மக்கள் அச்சமற்ற நிலையில் வாழ்வதற்கு உங்கள் தலைமையிலான அரசாங்கம் ஆற்றிய பணியினை எமது அமைப்பு நன்றியுடன் நினைவு கூர்வதுடன், நாட்டின் இறைமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் தங்களால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு எமது சமூகம் என்றும் தங்களுடன் இணைந்து செயற்படும் என்ற நல்ல செய்தியினை முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கடந்த 30 வருடமாக வடக்கில் வாழ்ந்த மக்கள் அசாதாரண சூழல் காரணமாக அனுபவித்து வந்த துன்பங்களையும்இதுயரங்களையும் இழப்புக்களையும் மீண்டும் நினைவுபடுத்தி கடந்த காலத்திற்கு செல்ல வேண்டிய தேவை இனி மேலும் ஏற்படாது என்ற நம்பிக்கை இஸ்லாமியர்களாகிய எங்கள் மத்தியில் ஆழமாக பதிந்துள்ளது.
1990 ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் அன்றைய பயங்கரவாத செயற்பாடு காரணமாக வெளியேற்றப்பட்டு அகதி முகாம்களில் 22 வருட காலமாக வாழ்ந்த துயர் மிகு வரலாற்றை ஜனாதிபதி ஆகிய நீங்கள் நன்கு அறிந்துள்ளீரகள்.அதற்கு பிரதி பலனாகத்தான் 2009 ஆம் ஆண்டு பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு மீண்டும் எமது தாயகத்தில் மீள்குடியேற வழி செய்தும் தந்தீர்கள். இந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களாகிய நாங்கள் அடைந்த மகிழ்ச்சி அளப்பறியது.
அதனை தொடர்ந்து எமது மக்கள் 2010 ஆம் ஆண்டு முல்லைத்தீவில் எற்கனவே வாழ்ந்த தமது கிராமங்களுக்கு மீள்குடியேற்றத்திற்காக வந்த போது எமக்கான அடிப்படை வசதிகள் எவையும் அதிகாரிகளினால் பெற்றுத் தருவதற்கு முயற்சிக்கவில்லை என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவருவது காலத்தின் தேவையாகும்.இவ்வாறான சூழலிலும் எமது மக்கள் இங்கு வாழ்கின்றனர் என்றால் அது இந்த நாட்டு மக்களுக்கு தங்களால் ஆற்றப்படும் பணிகளைின் நம்பகத் தன்மை என்பதையும் நாம் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.
இவ்வாறான சூழலில் மீள்குடியேற வந்த மக்களுக்கு தாங்கள் தங்களது இல்லறங்களை அமைத்துக் கொள்வதற்கு தேவைாயன இடங்கள் இல்லாத நிலையிலும்இஇருக்கின்ற உறவினர்களின் இடங்களில் சொந்த செலவில் சிறிய கொட்டில்களை அமைத்து பல குடும்பங்கள் ஒன்றாக இருக்க நேரிட்டது.அதனை தொடராக செய்வது என்பது சிரமமானதும்இகலாச்சார ரீதியிலான பிரச்சினகளை தோற்றுவிப்பதற்கும் வழியாக மாறிவிடும் என்ற அச்சத்தால் அப்போதைய அரச அதிபர்இமற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரிடத்தில் சென்று எமக்கான காணிகளை பெற்றுத் தருமாறு பல முறை கோறிக்கைவிடுத்தோம். அதற்கமைய அவர்கள் சில இடங்களை அடையாளப்படுத்தினார்கள்.அவ்வாறு அடையாளப்படுத்தப்பட்ட காணிகள் வனபரிபாலனத்துக்கு சொந்தமானது என்பதால், அதனை பெற்றுத் தருவது தொடர்பில் இவர்களால் உரிய நடவடிக்கையெடுக்கப்பட்டது.
அதன் பிறகு தங்களால் அமைக்கப்பட்ட வடமாகாண விசேட செயலணி அதனது அங்கத்தவர்கள் சகிதம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் செய்து, எமது மக்களின் நிலைமைகளை நேரடியாக கண்டறிந்து அதன் பிறகு எமது வீடுகளை நிர்மாணிப்பதற்கு தேவையான காணியினையும் அடையாளப்படுத்தி அதனை விடுவிப்பது தொடர்பிலான உரிய சட்ட முறையினை மேற்கொண்டு அதனை விடுவிப்பும் செய்துள்ளது.இந்த நிலையில் அந்தக் காணியினை எமது மக்களுக்கு பகிர்ந்தளிப்பு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுத்த போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்களும்அன்று விடுதலை புலிகளுடன் நெருக்கமாக செயற்பட்ட சில அதிகாரிகளும், அதனை எமது மக்களுக்கு வழங்கவிடாமல் ஆர்ப்பாட்டம் செய்துஇஅதில் தற்போது தடையினை ஏற்படுத்தியுள்ளனர்.
எமது மக்களுக்கு இந்த காணியினை வழங்க வனவல மற்றும் காணி அமைச்சுக்களும் ஜனாதிபதி செயலணியும் அனுமதியினை வழங்கிய போதும், தொடர்ந்தும் அதனை தடுப்பவர் யார் என்பதை அறிந்து கொள்ள எமது மக்கள் முயற்சித்த போது, அதற்கு பாதுகாப்பு தரப்பு என்று அரதிகாரிகளினால் கூறப்படுகின்றது.
அதிமேதகு ஜனாதிபதி அவர்களே!
இலங்கை நாட்டின் ஒருமைப்பாட்டுக்காகவும்இபயங்கரவாதத்தை ஒழிப்பதாகற்காகவும் இந்த நாட்டு முஸ்லிம்கள் ஆற்றியுள்ள பங்களிப்பினை நீங்கள் நன்கறிவீர்கள். குறிப்பாக வடக்கு முஸ்லிம்கள் உங்களுடன் கைகோர்த்து அனைத்து செயற்பாடுகளிலும் முன்னின்று உதவி செய்துவருவதை மீண்டும் ஒரு முறை தங்களின் கவனத்திற்கு நினைவுபடுத்தவிரும்புகின்றோம்.இனவாதத்தையும்இமத வாதத்தையும் துாண்டி அதன் மூலம் மீண்டும் மனித அழிவுக்கு துனைபோகும் சக்திகளின் செயற்பாடுகளுக்கு இடமளிக்க கூடாது என்பதில் நீங்கள் கொண்டுள்ள உறுதியான கொள்கையினை நாங்கள் என்றும் வரவேற்கின்றோம்.
இவ்வாறான உடன்பாட்டுக் கொள்கையினை கொண்ட எமது முஸ்லிம்களை முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து வெளியேற்றும் வகையில் முன்னெடுக்கப்படும் ஒரு செயற்பாடாகவே இதனை எமது மக்கள் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.அரச அதிகாரிகளால் தெரிவிக்கப்படும் இந்த கருத்தின் உண்மை தன்மையினை அறிந்து கொள்ளும் சக்தி எமக்கில்லை என்பதால் அதனை இந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் எமது மீள்குடியேற்றத்தினை வெற்றிகரமாக அடைந்து கொள்ள போதுமானவற்றை பெற்றுத் தரும் எமது நாட்டு ஜனாதிபதி என்ற வகையிலும் தங்களது கவனத்தினை செலுத்தி எமக்கென விடுவிக்கப்பட்டுள்ள காணியில் எம்மை மீள்குடியேற்ற உதவி செய்யுங்கள் என்ற அன்பான வேண்டுகோள்களை நாம் இந்த சந்தர்ப்பத்தில் உங்களிடம் விடுக்கின்றோம்.
கடந்த 22 வருடங்களாக எமது அகதி வாழ்க்கையில் இழந்த வற்றை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் எமது தாயகத்தில் ஆகக் குறைந்தது சொந்த வீடொன்றைக் கூட அமைத்துக் கொண்டு வாழ முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது . நாம் மீண்டும் அகதியாக முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.ஆகவே இவ்விடயம் குறித்து உடன் கவனம் செலுத்தி எமது மக்களையும் இம்மண்ணில் வாழ வழி ஏற்படுத்தி தாருங்கள் என்று அன்பாக உங்களிடம் கேட்டு நிற்கின்றோம்
நன்றி
இவ்வண்ணம்
தலைவர்
மொஹிதீ்ன் வாஹித்
பிரதிகள்-
கௌரவ பஷில் ராஸபக்ஷ-பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்
செயாளர்-பாதுகாப்பு அமைச்சு
![New%20message[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/04/new20message1.png?w=150&h=150)

Leave a comment