விசேட நிருபர்-
மட்டக்களப்பு: இலங்கை கால் பந்தாட்ட சங்கம் (Football Federation of Sri Lanka) 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான உதை பந்தாட்டச் சுற்றுப் போட்டி ஒன்றினை அகில இலங்கை ரீதியாக நடாத்தி வருகின்றது.
சென்ற மாதம் இச்சுற்றுப் போட்டியில் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட தெரிவுக்குழு அம்பாறை மாவட்ட தெரிவுக்குழுவினை வெற்றி கொண்டது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட அணி கொழும்பு மாவட்ட அணியினை எதிர்த்து கால் இறுதிப் போட்டிக்கான பலப் பரீட்சை ஒன்றினை எதிர் வரும் 28.05.2013 மட்டக்களப்பு மண்ணில் நடாத்த உள்ளது.
Leave a comment