காத்தான்குடி: காத்தான்குடி -1, அல் மத்ரஸதுல் ஹூஸைனிய்யாவின் 08வது பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை பிற்பகல் மஸ்ஜிதுல் ஹூஸைனிய்யா பள்ளிவாயல் மண்டபத்தில் அல் மஸ்ஜிதுல் ஹூஸைனிய்யா பள்ளிவாயல் தலைவர் எஸ்.ஏ.கே. பழீலுர் ரஹ்மான் ஜே.பி தலைமையில் இடம்பெற்றது.
இங்கு விஷேட சிறப்புரையை கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.ரி.எம். றிஸ்வி மஜீதி நிகழ்த்தினார்.
இதன் போது குர் ஆன் மத்ரசாக்கள் அபிவிருத்தி சபையினால் நடாத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகளுக்கு பிரதம அதிதி காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபைத் தலைவர் எஸ்.எம்.அலியார் (பலாஹி),கௌரவ அதிதிகளான சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான என்.எம்.அமீன் ,சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயலாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான நிலாம்,முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் கிழக்குப் பிராந்திய காரியாலய பொறுப்பாளர் அஷ்ஷேய்க் ஏஎல்.ஜூனைட் நளீமி மற்றும் கௌரவ ,சிறப்பு அதிதிகளினால் விருதும், சான்றிதழும், பரிசில்கழும் வழங்கிவைக்கப்பட்டது மட்டுமன்றி அல் மத்ரஸதுல் ஹூஸைனிய்யா மத்ரசா முஅல்லிமும், பள்ளிவாயல் பேஷ் இமாமுமான மௌலவி எம்.எம். மபாஸ் ஹாபிழுக்கு அவரின் சேவையைப் பாராட்டி பரிசும் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கல்முனை தள வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம். ஜாபிர்,முதலாம் குறிச்சி மீரா ஜூம்மா பள்ளிவாயல் தலைவர் எம்.ஐ.எம். சுபைர், சவூதி அரேபிய தூதுவராலய விசா அதிகாரி எஸ்.ஏ.கே. அப்துர் றாசிக் (நளீமி), குர் ஆன் மத்ரசாக்கள் அபிவிருத்தி சபை செயலாளர் எஸ்.எல்.ஏ.கபூர், கதீப்மார், இமாம்கள் சம்மேளன செயலாளர் எஸ்.எம்.எம். முஸ்தபா (பலாஹி), ஓய்வுபெற்ற வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.பி.முகைதீன் மற்றும் உலமாக்கள் ஊர் பிரமுகர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

Leave a comment