ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூக அமைப்பின் ஏற்பாட்டில் ‘மகப்பேறும் பெண் நோயியலும்’ எனும் தலைப்பில் கருத்தரங்கு

– பழுலுல்லாஹ் பர்ஹான்

kattankudy (2)காத்தான்குடி: காத்தான்குடி ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூக அமைப்பின் ஏற்பாட்டில் ‘மகப்பேறும் பெண் நோயியலும்’; எனும் தலைப்பில் கருத்தரங்கும் கேள்வி பதில் நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூக அமைப்பின் தலைவர் டாக்டர் ஹாதி தலைமையில் இடம்பெற்றது.

இங்கு மகப்பேறும் பெண் நோயியலும் எனும் தலைப்பில் மகப்பேற்று வைத்திய நிபுனர் எஸ்.எச்.எம்.சிராஜ் வி.ஓ.ஜியினால் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டதுடன், கேள்விகளும் கேட்கப்பட்டு அதற்கான பதிலும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூக அமைப்பின் உறுப்பினர்களான காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல். நசீர்தீன், கால் நடை வைத்திய அதிகாரி டாக்டர் மாஹிர், தென் கிழக்குப் பழ்கலைக்கழக விரிவுரையாளர் மன்சூர் மற்றும் உட்பட பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

ஐந்து வருடமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு சேவைகளை ஆற்றிவந்த மகப்பேற்று வைத்திய நிபுனர் எஸ்.எச்.எம்.சிராஜ் வி.ஓ.ஜி உயர் கல்வி நிமித்தம் அமெரிக்கா செல்ல இருப்பதால் அவரின் சேவையை பாராட்டி  ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூக அமைப்பின் உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment