Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • காத்தான்குடி ஹிழ்றியா வித்தியாலய மாணவன் மாவட்டத்தில் முதலிடம்!

    காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கடமை புரியும் திவினெகும அபிவிருத்தி உத்தியோகத்தரும் ஊடகவியலாளருமான எம்.எச்.எம். அன்வரின் புதல்வரான அர்ஷக் அகமட், 2014- தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 193 புள்ளிகளைப் பெற்று, மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றிருக்கிறார்.

  • கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாபெரும் முதலாவது இரத்ததான முகாம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கிவரும் கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் எனும் தொனிப்பொருளில் மனித நேயம் பேணும் மாபெரும் முதலாவது இரத்ததான முகாம் 27-09-2014 நேற்று சனிக்கிழமை காத்தான்குடி அல்-ஹிறா மகா வித்தியாலத்தில் இடம்பெற்றது.

  • வெளிநாட்டுப் பயிற்சியாளர்களின் பலத்த போட்டிகளுக்கு மத்தியில் இலங்கை கிரிக்கட் அணிக்கு பயிற்சியாளராக மாவன் அத்தபத்து தெரிவு!

    கொழும்பு: இலங்கையின் முன்னாள் சிரேஷ்ட கிரிக்கெட் துடுப்பாட்ட வீரரும் அணியின் தலைவராக செயற்பட்டவருமான மாவன் அத்தபத்து, இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இப்பதவிக்கு வெளிநாட்டவர்கள் பலர் விண்ணப்பித்திருந்த போதும், இறுதியாக இங்கிலாந்து நாட்டவரான ஜோன் லுயிஸ் மாவனுக்கு போட்டியாக இருந்துள்ளார்.

  • ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறையும் 100 கோடி அபராதமும்

    டெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் 100 கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இந்த வழக்கில் தீர்ப்பையும் தண்டனையும் நீதிபதி மைக்கேல் குன்ஹா இன்று மாலை அறிவித்தார்.

  • அசின் விராது தேரர் இலங்கை விஜயத்திற்கு விசா வழங்கப்பட்டமைக்கு சட்டத்தரணி ஹரீஸ் எம்.பி. கண்டனம்

    – ஹாசிப் யாஸீன் கொழும்பு: மியன்மாரின் 969 இயக்கத்தின் தலைவரான அசின் விராது தேரர் இலங்கை விஜயத்திற்கு விசா வழங்கப்பட்டமைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது பலத்த கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

  • நாவிதன்வெளி விளையாட்டுக் கழகங்களிற்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பள்ளிவாசல்களுக்கு நிதி வழங்கும் நிகழ்வு

    – ஹாசிப் யாஸீன் கல்முனை: நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மத்தியமுகாம், 6ஆம் மற்றும் 12ம் கொளனி போன்ற பிரதேச விளையாட்டுக் கழகங்களிற்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பள்ளிவாசல்களுக்கு நிதி வழங்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (26) 5ஆம் கொளனி தாருல் ஹிக்மா அரபுக்கலாசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

  • ஜனாதிபதி நாட்டில் இல்லாத ஓர் சந்தர்ப்பத்தில் பொதுபலசேனாவின் விசேட வரவேற்பில் வந்திறங்கிய ‘கசாப்புக் கடைக்காரன்’!

    கொழும்பு: மியன்மார் முஸ்லிம்களின் இரத்தத்தைச் சுவைத்த மியன்மார் முஸ்லிம்களின் கசாப்புக்கடைக்காரன் என அழைக்கப்படும், மியன்மாரின் பிரபல பௌத்த பிக்கு விராது தேரர் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கைக்கு வருகை தந்துள்ளார். பொதுபல சேனா அமைப்பு நாளை நடத்தும் தேசிய மாநாட்டின் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளும் நோக்கில் அவரது இலங்கை விஜயம் அமைந்துள்ளது.

  • ‘மண்ணின் பெருமையை உலகரிய வைத்த அப்துல் அஸீஸை பாராட்டுகின்றேன்’- சட்டத்தரணி ஹரீஸ் எம்.பி.

    – ஹாசிப் யாஸீன் கல்முனை: கல்முனை மண்ணின் பெருமையை உலகரிய வைத்த அப்துல் அஸீஸைப் பாராட்டுகின்றேன் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

  • ‘நதியைப்பாடும் நந்தவனங்கள்’ கவிதைநூல் வெளியீட்டு விழா

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: 50 கவிஞர்களால் எழுதப்பட்ட இலங்கையின் முதலாவது கவிதை நூலான நதியைப்பாடும் நந்தவனங்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா 26.9.2014- நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

  • ஐ.நாவின் தவறை சுட்டிக்காட்டியிருப்பது ஜனாதிபதியின் துணிச்சல்

    நியுயோர்க்: இலங்கையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஸ்திரத்தன்மையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சர்வதேச சமூகத்துக்கு நேரடியாக எடுத்துக்கூறியிருப்பதாக புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர். ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையை பாராட்டியிருக்கும் புத்திஜீவிகள் மற்றும் மதத் தலைவர்கள், ஐ.நா சபையில் சென்று அதன் தவறுகளைச் சுட்டிக்காட்டியிருப் பதானது ஜனாதிபதியின் துணிச்சலை எடுத்துக்காட்டியிருப்பதாகவும் கூறியுள்ளனர்.

  • பலஸ்தீன் தலைவருடன் ஜனாதிபதி மஹிந்த

    நியூயோர்க்: ஐ. நா. பொதுச் சபையில் 69 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றுவதற்காக சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நியூயோர்க்கில் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்முத் அப்பாஸை சந்தித்து ஆரத்தழுவி கொண்டபோது பிடிக்கப்பட்ட படம்.

  • அமெரிக்காவின் கூட்டுத் தாக்குதலும், தாக்குப்பிடிக்கவேண்டிய ஐ.எஸ்.உம்…

    – MJ லண்டன்: அப்துல்லாஹ் பக்தாதி தலைமையில், இஸ்லாமிய தேசமாக (IS) குறிப்பிட்ட பிரதேசங்களைக் கைப்பற்ற வெளிக்கிட்ட இஸிஸ் அமைப்பினர் தாங்கள் வகுத்த எல்லையை எட்ட முடியாமலும், மேலதிக பிரதேசங்களை மேலும் தொடர்ந்து கைப்பற்ற முயற்சிக்காமலும் காலத்தைத் தாழ்த்திவரும் நிலையில்,

←Previous Page
1 … 654 655 656 657 658 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar