நாவிதன்வெளி விளையாட்டுக் கழகங்களிற்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பள்ளிவாசல்களுக்கு நிதி வழங்கும் நிகழ்வு

???????????????????????????????– ஹாசிப் யாஸீன்

கல்முனை: நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மத்தியமுகாம், 6ஆம் மற்றும் 12ம் கொளனி போன்ற பிரதேச விளையாட்டுக் கழகங்களிற்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பள்ளிவாசல்களுக்கு நிதி வழங்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (26) 5ஆம் கொளனி தாருல் ஹிக்மா அரபுக்கலாசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் நாவிதன்வெளி பிரதேச இணைப்பாளர் ஏ.எம்.மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் நிசார் ஹாஜி, சவளக்கடை அமைப்பாளர் ஏ.அஸீஸ், மைகோர்ப் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும், சமூக சேவையாளருமான லயன் சித்தீக் நதீர். அரபுக் காலாசாலை அதிபர் ஏ.சீ.எம்.அன்வர், விளையாட்டுக் கழக தலைவர், செயலாளர்,உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

???????????????????????????????

நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள இளைஞர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்தும் நோக்குடன் பாராளுமன்ற உறுப்பினரின் இவ்வாண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு இப்பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டு 9 கழகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது தாருல் ஹிக்மா அரபுக்கலாசாலையின் அபிவிருத்திகள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் மக்கள் சந்திப்பும் இடம்பெற்றது.

???????????????????????????????

Published by

Leave a comment