-
அரஃபா நாள் வெள்ளிக்கிழமை வருவதால் “ஹஜ்ஜுல் அக்பர்” என அறிவிப்பு
றியாத்: 25/09/2014 வியாழக்கிழமை துல் ஹஜ் பிறை 1 என ஸவூதி அரேபிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. இதனடிப்படையில், ஸவூதி, குவைத், கட்டார், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் அக்டோபர் 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை அரஃபா தினம் மற்றும் மறுநாள் அக்டோபர் 4ஆம் தேதி சனிக்கிழமை ஈதுல் அழ்ஹா என்னும் ஹஜ்ஜுப் பெருநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
50 கவிஞர்களால் எழுதப்பட்ட இலங்கையின் முதலாவது கவிதை நூலான நதியைப்பாடும் நந்தவனங்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா நாளை
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: 50 கவிஞர்களால் எழுதப்பட்ட இலங்கையின் முதலாவது கவிதை நூலான நதியைப்பாடும் நந்தவனங்கள் கவிதைநூல் வெளியீட்டு விழா நாளை 26.9.2014- வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் தென்கிழக்கு பல்கலைகழக உபவேந்தர் கலாநிதி எஸ்.முஹம்மது இஸ்மாயில் தலைமையில் நடைபெறவுள்ளது.
-
ஒரு கோடி ரூபா பெறுமதியான 20 தங்க பிஸ்கட்டுகளை கடத்திவர முயன்ற விமான நிலைய ஊழியர் கைது!
கொழும்பு: டுபாயிலிருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான 20 தங்க பிஸ்கட்டுகளை கால்களில் கட்டி மறைத்து விமான நிலையத்துக்கு வெளியே கொண்டு வர முற்பட்ட ஊழியர் ஒருவர் உட்பட இரண்டு பயணிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
துல்ஹஜ் தலைப்பிறை மாநாடு
கொழும்பு: ஹிஜ்ரி 1435 துல்ஹிஜ்ஜாஹ் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று 25ம் திகதி வியாழக்கிழமை மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது. கொழும்பு பெரிய பள்ளிவாசல் ஹமீதியா மண்டபத்தில் நடைபெறும் பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இடம்பெற இருக்கின்றது.
-
நல் வாழ்த்துக்கள்
நதியைப்பாடும் நந்தவனங்கள் கவிதை நுால் வெளியீட்டு விழா சிறப்புடன் நடைபெற எமது நல் வாழ்த்துக்கள். – WWW.YOURKATTANKUDY.COM –
-
கடைகள் எரியும்போது ‘பிடில்’ வாசித்த மாவனல்லை மக்கள்..
– அப்துல் ஸத்தார் மாவனல்லை: 24-09-2014 புதன்கிழமை மாவனல்லை பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த கடைத்தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 20 கடைகள் சேதமடைந்திருக்கின்றன. இவற்றுள் சுமார் 10 கடைகள் முற்றாக அழிந்திருக்கின்றன.
-
துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்புகளும் உழ்ஹிய்யாவின் சட்டங்களும்
– மௌலவி K.L.M. இப்ராஹீம் மதனீ ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும் ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக. சிறப்புகள்:-
-
அமெரிக்காவின் கூட்டு வான்தாக்குதலில் குறைந்தது 70 இஸிஸ் போராளிகள் மரணம்!
– AF-90 பெய்ரூட்: சிரியாவில் இஸிஸ் நிலைகள் மீது, அமெரிக்க மற்றும் அதன் கூட்டுப்படை நடத்திய அதிரடிவிமானத் தாக்குதல்களில் குண்டு வீச்சில் குறைந்தது 70 போராளிகள் கொல்லப்பட்டதாக செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
-
மாவனல்லை: தீயால் அழிந்த 17 கடைகள்!
மாவனல்லை: கேகாலை மாவட்டம் மாவனல்லை நகரில் இன்று ஏற்பட்ட திடீர் தீ காரணமாக நகரில் உள்ள சில வர்த்தக நிலையங்கள் அழிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ இன்று புதன்கிழமை முற்பகல் பரவ தொடங்கியதாக பொலிஸார் கூறினர்.
-
பூமியும் செவ்வாயும்..
– SHM நியுயோர்க்: பூமியிலிருந்து செவ்வாய்க்குப் போயுள்ள மங்கள்யான் விண்கலம் குறித்துத்தான் இந்தியாவில் மாத்திரமன்றி உலகம் முழுவதும் இன்று காலை முதலே பேச்சாக உள்ளது. மங்கள்யான் வெற்றி மூலம் செவ்வாய் கிரகத்தை எட்டிப் பிடித்த முதல் ஆசிய நாடு என்ற பெருமயை இந்தியா பெற்றுள்ளது.
-
ஜனாதிபதி நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் சு.க. அமைப்பாளர்களுக்கு அவசர அழைப்பு!
கொழும்பு: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் அவசரமாக இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். கட்சியின் தலைமை அலுவலகத்திலிருந்து அதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது.
-
இலங்கை நிலை குறித்து மனித உரிமை ஆணையர் கவலை
ஜெனீவா: இலங்கையில் சிவில் அமைப்புகள், மனித உரிமை பாதுகாவலர்கள், பாதிக்கப்பட்டோருக்கான அமைப்புக்கள், சர்வதேச நீதிவிசாரணையை வலியுறுத்துவோர் உள்ளிட்ட பிரிவினர் மீது அரசாங்க அமைப்புக்களாலும், அரசு சாரா அமைப்புக்களாலும் விடுக்கப்படும் அச்சுருத்தல்கள் கண்டு தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஐ நா மனித உரிமை ஆணையர் தெரிவித்துள்ளார்.