லண்டன்: அப்துல்லாஹ் பக்தாதி தலைமையில், இஸ்லாமிய தேசமாக (IS) குறிப்பிட்ட பிரதேசங்களைக் கைப்பற்ற வெளிக்கிட்ட இஸிஸ் அமைப்பினர் தாங்கள் வகுத்த எல்லையை எட்ட முடியாமலும், மேலதிக பிரதேசங்களை மேலும் தொடர்ந்து கைப்பற்ற முயற்சிக்காமலும் காலத்தைத் தாழ்த்திவரும் நிலையில்,
தற்பொழுது ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ் உட்பட ஐந்து அரபு நாடுகளும் இணைந்து இஸ்லாமிய தேசத்தில் விமான மூலமான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.
பிரித்தானியாவின் பாராளுமன்றத்தில் இரண்டாவது தடவையாக மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் இஸ்லாமிய தேசத்துக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற தீர்மானம் நேற்று வெள்ளிக்கிழமை நிறைவேறி இருக்கின்றது.
இதனடிப்படையில் மேற்படி கூட்டுத்தாக்குதலில் அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளுடன் பிரித்தானியாவும் இணைந்து கொள்கிறது.
இஸ்லாமிய தேசத்துக்கு எதிரான எதிர்ப்பலைகள்:
இஸ்லாத்தை எதிர்ப்பவர்களால் திட்டமிட்டு இவ்வியக்கம் உருவாக்கப்பட்டது எனவும், அல்ய்தா இயக்கத்தை துண்டாடும் நோக்கிலும், தலிபான்களை திசை திருப்பும் நோக்கிலும் அமெரிக்காவின் பிரமாண்டமான யு.எஸ்.ஐ.சி மற்றும் சி.ஐ.ஏ ஆகிய உளவுத் துறைகளாளும், இஸ்ரேலின் மொசாட் புலனாய்வுப் பிரிவாளும் இஸிஸ் அமைப்பு உருவாக்கப்பட்டதாக தற்பொழுது தெட்டத்தெளிவான ஆதாரங்களை ஐரோப்பிய பத்திரிகைகள் வெளிக்கொணர்ந்து வருகின்றன.
இந்தவகையில் ஈராக்கில் அமெரிக்கப் படைகள் நிலைகொண்டிருந்த 2003-2010 காலப்பகுதிகளில் அல்கைதாவில் இணைந்து போராடிய அப்துல்லாஹ் பக்தாதி, மற்றுமொரு போராட்ட பெரும்புள்ளியான ஹமிட் தாவுத் அல் ஸவி என்பவருக்குப் பதிலாக கைதுசெய்யப்பட்டு, பின்னர் பக்தாதியாவே 2009 காலப்பகுதியில் அமெரிக்கா-ஈராக் படைகளால் விடுதலை செய்யப்பட்டிருந்ததும், அவர் கைது செய்யப்பட்டிருந்த காலப்பகுதியில் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், இஸிஸ் அமைப்பை அமெரிக்காவும், இஸ்ரேலுமே உருவாக்கி இருக்கின்றன என்பதையும் ஐரோப்பாவின் ஊடகங்கள் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கின்றன.
இதற்கிடையில், பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய பள்ளிவாயல்கள், இஸ்லாமிய அமைப்புக்கள், அரபு வலயம் உட்பட இஸிஸ் அமைப்பின் செயற்பாடுகளை வெளிப்படையாவே கண்டித்திருக்கின்றன.
அமெரிக்காவின் விமானத் தாக்குதல்கள்:
வியட்நாம் படுதோல்வியின் பின்னர் தனது முதுகெலும்பை நிமிர்த்துவதற்கு அமெரிக்காவுக்குக் கைகொடுத்தது வளைகுடா யுத்தமே. அதிலும் அமெரிக்காவின் விமானத் தாக்குதலே வெற்றிக்குக் காரணமாக அமைந்தன.
1990-91 காலப்பகுதியில் அமெரிக்காவையும் அதன் கூட்டணி 30 நாடுகளையும் தனது படைகளின் உதவியில் தனித்து நின்று எதிர்த்த சதாம், ஆரம்பத்தில் வெற்றியே பெற்றார். “உனக்கு இயலுமானால் தரைவழியாக ஈராக்கிற்குள் நுழைந்துபார்” என்று அமெரிக்காவுக்கு தனது சுண்டுவிரலைக்காட்டி சவால் விட்டார் அப்போதய ஈராக் ஜனாதிபதி சதாம் ஹூஸைன்.
ஈராக்கின் தரைப்படை அப்போது உண்மையில் ஓர் பிரமாண்டமான பலத்திலேயே இருந்தது. அதனால் அமெரிக்கா ஈராக்கின் சவாலை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அமெரிக்கா தனது வான் தாக்குதலையும் அதன் மூலமான நவீன ஆயுதங்களையும் ஈராக்கில் பொழிந்து ஈராக்கை தோற்கடித்தது. அமெரிக்காவின் வான்தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் சதாமின் பீரங்கிப்படையினர் கருகி நிலத்தில் வீழ்ந்தனர்.
இது ஈராக்கின் முதலாவது தோல்வியும், இரண்டாம் உலகப்போரின் பின்னர் அமெரிக்காவின் முதலாவது வெற்றியாகவும் கருதப்பட்டது.
பின்னர் இதே சதாமின் படைக்கும் அதே அமெரிக்காவுக்கும் போர் மூண்டது. முதல் சொன்னது போலவே சதாம் சூளுரைத்தார். வான் தாக்குதலின் உதவியுடன் 2003 இல் அமெரிக்காவின் தரைப்படை ஈராக்கின் பஸ்ரா நகரைக் கைப்பற்றியது. அதன் பின்னர் ஈராக் முழுவதும் கைப்பற்றப்பட்டு சதாம் தூக்கிலிடப்பட்டார்.
இப்போது அமெரிக்காவின் 3வது வான் தாக்குதலை எதிர்கொள்ளும் ஈராக் மற்றும் சிரியாவின் படைகளாக இஸ்லாமிய தேசப் போராளிகள் இருக்கின்றனர். அமெரிக்காவின் கூட்டுத் தாக்குதல்களில் நூற்றுக்கும் அதிகமான இஸிஸ் போராளிகள் நிலத்தில் சுருண்டு வீழ்ந்திருக்கின்றனர்.
அமெரிக்காவின் விமானத் தாக்குதல்களை தாக்குப்பிடிக்க முடியாமல் பொதுமக்கள் குடியிருப்புக்களில் போராளிகள் ஓடி ஒளியும் பரிதாப நிலையும் ரக்கா, மொசூல் ஆகிய நகரங்களில் ஏற்பட்டிருப்பதை அகதிகளாக வெளியேறும் மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இஸிஸ் தாக்குப்பிடிக்க வேண்டும் அல்லது சரணடைய வேண்டும்
ஒன்றில் அமெரிக்க வான்தாக்குதல்களை தாக்குப்பிடித்து தொடர்ந்தும் நிலைத்திருக்கக்கூடிய சந்தர்பம் இஸிஸ் அமைப்புக்கு இருக்க வேண்டும். அல்லது சரணடைய வேண்டும்.
ஏனெனில், இஸிஸ் அமைப்பிற்கு நான்கு பக்கங்களும் அரபு வலயத்தின் பலத்த எதிரப்பிருக்கின்றன. அரபு வலயத்தை எதிர்க்கும் ஒரே ஒரு நாடான ஈரான், எந்தவகையிலும் உதவப்போவதில்லை. ஒன்றில் வீரமரணம் அல்லது சரணடைவதைத் தவிர வேறொன்றும் இஸிஸ் அமைப்புக்கு இல்லை.
சுமார் ஒருவருடமாகப் போராடும் இஸிஸ் அமைப்பின் தலைவர் பக்தாதி, ஒரே ஒரு தடவை தனது முகத்தை உலகிற்கு காட்டிவிட்டு மறைந்துவிட்டார். இப்படைகளை தற்பொழுது இயக்குவது உள்ளுர் தலைவர்களே என தற்பொழுது தெரியவருகிறது. பரந்த கொள்கையில் வெளிக்கிட்ட இவ்வியக்கம், இன்று கொள்கையற்ற நிலைப்பாட்டில் பல குழுக்களாகப் பிரிந்து தாங்கள் நினைப்பதைச் செய்துமுடிக்கும் பரிதாபத்தில் இருக்கின்றனர்.
அமெரிக்கா, விருப்பமல்லாமலும், அரபு நாடுகளின் வேண்டுகோளுக்கிணங்கவுமே இஸிஸ் மீது குண்டுத்தாக்குதல்களை மேற்கொள்வதாகவும், இது ஓர் நாடகம் எனவும் ஐரோப்பிய பத்திரிகைகள் செய்திவெளிக்கொணர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Published by





Leave a comment