‘மண்ணின் பெருமையை உலகரிய வைத்த அப்துல் அஸீஸை பாராட்டுகின்றேன்’- சட்டத்தரணி ஹரீஸ் எம்.பி.

Harees MPss– ஹாசிப் யாஸீன்

கல்முனை: கல்முனை மண்ணின் பெருமையை உலகரிய வைத்த அப்துல் அஸீஸைப் பாராட்டுகின்றேன் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

162 நாடுகள் அங்கம் வகிக்கும் சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் தலைவராக கல்முனையைச் சேர்ந்த ஏ.எல்.அப்துல் அஸீஸ் தெரிவு செய்யப்பட்டமையையிட்டு அவருக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேற்கண்டவாறு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் அவ்வாழ்த்துச் செய்தியில் தெரிவித்ததானது,

இவ்வாண்டு பீ 77 நாடுகள் குழுவின் வியன்னா அலுவலகத்திற்கான தலைமைப் பொறுப்பை ஏற்றதுடன் சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதையிட்டு நாமும் எமது பிரதேச மக்களும் புலங்காகிதம் அடைகின்றோம்.

Harees MPss
சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் M.P.

நாட்டில் தற்போது பேரினவாத குழுக்களினால் முன்னெடுத்துச் செல்லப்படும் இனவாத செயற்பாடுகள் தலைவிரித்தாடும் நிலையில் இவ்வாறு சர்வதேச பதவிக்கு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த கிழக்கின் முகவெற்றிலை கல்முனை மண் பெற்றெடுத்த நீங்கள் நியமிக்கப்பட்டதன் மூலம் நாட்டின் மூவின மக்களுக்கும், தாய் நாட்டுக்கும் பெருமையைப் பெற்றுக்கொடுத்துள்ளதுடன் கல்முனை மண்ணுக்கு சர்வதேச ரீதியில் புகழையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

ASEES1
ஏ.எல்.அப்துல் அஸீஸ்

இதன் மூலம் நாட்டின் மூவின மக்களும் இலங்கையர் என்ற ரீதியில் மகிழ்ச்சியடைவார்கள் என நம்புகின்றேன்.

தங்களின் இவ்வுயர் அடைவுகளையும், ஆளுமைகளையும் எமது பிரதேச மாணவர்களும், இளைஞர்களும் அவர்களின் வாழ்க்கையில் ஒரு முன்மாதிரியாக கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கின்றேன் என்றார்.

Published by

Leave a comment