அன்பார்: ஈராக்கின் மேற்கு அன்பார் மாகாணத்தில் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழு சுன்னி பழங்குடியினர் 322 பேரை படுகொலை செய்திருக்கிறது. கிணரொன்றில் இருந்து 50 க்கும் அதிகமான உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கும் ஈராக் மனித உரிமை அமைச்சு, அல்பு நிம்ர் பழங்குடியைச் சேர்ந்த 60 பேர் கடத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிறன்று காலை ஐ.எஸ். ஆயுததாரிகள் குறைந்தது 50 பழங்குடியினரை சுட்டுக் கொன்றிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.எஸ். குழுவும் சுன்னிப்பிரிவைச் சேர்ந்தது என்பதோடு அது ஈராக் மற்றும் சிரியாவில் கணிசமான நிலத்தை கைப்பற்றியுள்ளது.
ஐ.எஸ். 65 க்கும் அதிகமானோரை யுத்த கைதிகளாக பிடித்துவைத்திருப்பதாக மேற்படி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்போது பழங்குடியினரின் கால்நடைகளையும் ஐ.எஸ். களவாடி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பழங்குடியினர் மீதான பாரிய படுகொலை சம்பவங்கள் நாளாந்தம் இடம்பெறுவதாக ஈராக் அரச தரப்பு குறிப்பிடுகிறது. இதில் ஞாயிறன்று கொல்லப்பட்டவர்களில் 10 பெண்கள் மற்றும் சிறுவர்களும் அடங்குவதாக பழங்குடி தலைவர்கள் ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளனர்.
ஐ.எஸ். இயக்கத்தால் பழங்குடி ஈராக்கியர் சுட்டுக்கொல்லப்படும் பரிதாபக் காட்சி!
இவர்கள் பொது இடத்தில் வரிசையாக நிற்கவைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஐ.எஸ். க்கு எதிராக கிளர்ச்சி செய்த குற்றச்சாட்டுக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சிறு இயக்கமாக உருவாக பிரமாண்டமான இராணுவமாக மாற்றியமைக்கும் ஐ.எஸ். இயக்கம், தனது இஸ்லாமிய நெறிமுறைகளைவிட்டும் தூர விலகிச் செல்வது உலகறிந்த விடயம். பல்லாயிரக்கணக்கான தனது எதிரிகளை சுட்டுவீழ்த்துவதில் தனது திறமையை உலகுக்கு வெளிக்காட்டும் இவ்வியக்கம் அண்மைக்காலமாக எண்ணெய் கள்ளச் சந்தையில் கணிசமான வருமானங்களை ஈட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment