கொஸ்லந்த மக்களுக்கு பாகிஸ்தான் நிவாரண உதவி

pakistanகொழும்பு: கொஸ்லந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கென பாகிஸ்தான் அரசாங்கம் அன்பளிப்பு செய்த முதலாவது தொகுதி நிவாரணப் பொருட்கள் நேற்று இந்நாட்டுக்கு வந்தது. நேற்று பிற்பகல் 1.40 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த பாகிஸ்தான் விமானப் படைக்குச் சொந்தமான சி 130 விமானத்தில் இந்த அத்தியாவசிய பொருட்கள் கொண்டுவரப்பட்டன.

இதனை வரவேற்க இருநாட்டு உயர் அதிகாரிகளும் கட்டுநாயக்க விமானப் படைத் தளத்திற்கு வருகை தந்திருந்தனர். இதேவேளை, பாகிஸ்தான் அன்பளிப்பு செய்யவுள்ள இரண்டாவது தொகுதி நிவாரணப் பொருட்கள் இன்று இலங்கை வந்தடையவுள்ளன.

150 கூடாரங்கள், (5 கேவி) ஜெனரேட்டர்கள் 10 மற்றும் 700 கிலோ மருந்து பொருட்களை பாகிஸ்தான் வழங்கியுள்ளது.

பாகிஸ்தான் விமானப் படைக்குச் சொந்தமான சி. 130 விமானத்தில் நேற்று கொழும்பை வந்தடைந்த முதற் தொகுதி நிவாரணப் பொருட்களை கட்டுநாயக்க விமானப் படைத் தளத்தில் வைத்து இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் காஷிம் குறைஷி இலங்கை இராணு வத்தின் பிரதி பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் ஈ.எம்.எம். அம்பம்பொலவிடம் சம்பிரதாய முறைப்படி கையளித்தார்.

pakistan

கொஸ்லந்தை மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்றதை அடுத்து இலங்கை இராணுவம் உட்பட பாதுகாப்பு படையி னர் உடனடி மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தை அடுத்து பாகிஸ் தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீம் ஷரீப் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்கவுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த அனுதா பத்தை தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனிதாபிமான அடிப்படையில் இராணுவம் முன்னெடுக்கும் நடவ டிக்கை களுக்கு ஒத்துழைப்பதாகவும் கூறியிருந்தார்.

நிவாரண உதவிப் பொருட்களுடன் பல மணி நேர பயணத்திற்கு பின்னர் கொழும்பை வந்தடைந்த பாகிஸ்தான் விமானப்படை விமானத்தில் வருகைதந்த நான்கு விமான ஓட்டிகள் உட்பட 17 விமானப் படை வீரர்களுக்கு இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் காஷிம் குறைஷி மற்றும் கட்டுநாயக்க விமானப் படைத்தள தளபதி எயார் கொமடோர் எஸ்.கே. பத்திரன ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

Published by

Leave a comment