பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையின் இஸ்லாமிய புதுவருட கலை நிகழ்வு

unnamedபழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையில் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கான ஹிஜ்ரி -1436 இஸ்லாமிய புதுவருட கலை நிகழ்வுகள் 2014-11-02 நேற்று ஞாயிற்றுக்கிழமை  பிஸ்மி தலைமையகத்தில் இடம்பெற்றது.
பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.ஆர்.எம். அஸ்ஹர் (நளீமி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுமார் 220 மாணவ மாணவிகள் கலந்து கொண்டதோடு பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலை ஆசிரியைகள் மற்றும் பிஸ்மி குழுமத்தின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

காத்தான்குடி மற்றும் பாலமுனை ஆகிய பிஸ்மி கிளைகளில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளின் ஆற்றல்களை வெளிக்கொணரும் வகையில் உரையாடல், கஸீதாக்கள், முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள் பற்றிய பேச்சுகள், பிஸ்மி செய்திகள் போன்ற பல்வேறு விதமான இஸ்லாமிய கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் நிகழ்வின் இறுதியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இனிப்புப் பண்டங்களும் இஸ்லாமிய மாதங்களை உள்ளடக்கிய ஸ்டிக்கர்களும் வழங்கப்பட்டன.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment