இட ஒதுக்கீடும் நிரந்தர கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வும் பிரதம அதிதியாக கிழக்குமாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுாக் பங்கேற்பு.

-டீன் பைறுாஸ்-

SAM_2282காத்தான்குடி: புதிய காத்தான்குடி ஹிஸ்புல்லா பாலர் பாடசாலையின்   நிரந்தர கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு  (03.11.2014 திங்கற்கிழமை)மேற்படி பாலர் பாடசாலையின் தலைவரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான  எச்.எம்.எம். பாக்கீர் BA/JP தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதி  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுாக்-Eng கலந்து கொண்டதுடன் அன்னாரினால் அடிக்கல்லும் நடப்பட்டது.

புதிய காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் கட்டிடத்தில் சுமார் மூன்று வருடங்களாக இயங்கி வரும் மேற்படி பாலர் பாடசாலையானது போதிய இடவசதியின்றி பல சிரமங்களுக்கு மத்தியில் மிக சிறப்பாக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேற்படி பாலர் பாடசாலைக்கான ஓர் நிரந்தர இடம் இல்லாததினை பாடசாலை நிர்வாகம்  பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்  எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா MA/MP அவர்களிடம் கூறியதற்கமைய அமைச்சரினால் பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் கடற்கரை வீதி கட்டிடத்தொகுதி அருகில் பாடசாலைக்கான நிரந்தர இட ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன் அமைச்சரினால் இருபது இலட்சம் ரூபாய் நிதியும் வழங்கப்பட்டதாக பாலர் பாடசாலையின் தலைவரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான  எச்.எம்.எம். பாக்கீர் BA/JP தெரிவித்தார்.

எமது பாலர் பாடசாலைக்கான ஓர் நிரந்தர இடம் கிடைப்பதில் எமக்கு பல்வேறு வழிகளிலும் உதவிய எமது கண்ணியத்துக்கும் மரியாதைக்குமுறிய எமது  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுாக் பொறியியலாளர் அவா்களுக்கு எமது நிர்வாகிகள், மாணவர்கள், பொற்றோர்கள், புதிய காத்தான்குடி மக்கள் சார்பாகவும்  மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக எச்.எம்.எம். பாக்கீர் BA/JP கூறினார்.

மேற்படி நிகழ்விற்கு மௌலவி ஏ.எல். ஆதம்லெப்பை(பலாஹி) பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவர் அல்ஹாஜ் ULM. ஹக்கீம் (ஆசிரியர்) பொருளாலர் அல்ஹாஜ் MI. பத்குல் கரீம் JP பாலர் பாடசாலை செயலாளர் MHM. ஹமீட் JP மற்றும் பாலர் பாடசாலை நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

SAM_2282SAM_2284SAM_2281OLYMPUS DIGITAL CAMERA

 

Published by

Leave a comment