-
மட்டு-மாவட்டத்தில் 30 பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சலுகை அடிப்படையில் மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு சலுகை அடிப்படையில் வரி இல்லாமல் 50000 ரூபாய் பெறுமதிக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்படும் என கடந்த வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 பொலிஸ் நிலையங்களிலுமுள்ள சுமார் 30 பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சலுகை அடிப்படையில் மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்வு 06-12-2014 நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலத்தில் இடம்பெற்றது.
-
மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்தில் இருபெரும் நிகழ்வுகள்.
-டீன் பைரூஸ்- மட்டக்களப்பு; மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்தில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்தல் மற்றும் மாணவர்களுக்கான தளர்பாடங்கள் கையளிக்கும் நிகழ்வுகள் (06.12.2014 வெள்ளிக்கிழமை) பாடசாலை அதிபர் ஜனாப் MLM கான் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம் பெற்றது. நிகழ்விக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் கௌரவ அல்ஹாஜ் MF முகம்மது சிப்லி Eng கலந்து கொண்டார்.
-
அஸ்வரின் இடத்துக்கு அமீர்அலி
கொழும்பு: ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசியப்ப ட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர் அலி ஏற்றுக் கொண்டுள்ளார். கடந்த வாரம் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ஏ.எச்.எம். அஸ்வர் இராஜினாமா செய்திருந்தார். அவரது இடத்து க்கு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர் அலியை நியமிக்க அரசு முடிவு செய்திருந்தது.
-
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக அஸ்வர்
கொழும்பு: வெகுசன ஊடக மற்றும் தகவல் அமைச்சின் முன்னாள் கண்காணிப்பு எம்.பியான ஏ.எச்.எம். அஸ்வர் வெகுஜன ஊடக தகவல் மற்றும் ஜனாதிபதியின் பாராளுமன்ற அலுவல்கள் விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தனது நியமனக் கடிதத்தை அலரி மாளிகையில் வைத்து ஜனாதிபதியிடம் பெற்றுக் கொண்டார்.
-
‘மைத்திரி எனக்கு சவாலே இல்லை’: ஜனாதிபதி மஹிந்த
கொழும்பு: என்னுடன் போட்டியிட மைத்திரிபால சிறிசேனவுக்கு முடியுமா? அவர் எனக்கு எவ்வகையிலும் ஒரு சவாலாக இருக்கவே முடியாது. உண்மையில் இத்தேர்தலில் நான் சந்திரிக்காவுடன்தான் போட்டியிடுகின்றேன். அதுவும் சந்திரிகா, மங்கள கூட்டு அணியுடன்தான் போட்டியிடுகிறேனே தவிர மைத்திரியுடன் அல்ல. என்னைப் பொறுத்தவரையில் மைத்திரிபால சிறிசேனவை நான் ஒரு பொருட்டாகவே கொள்ளவில்லை.
-
“எனது அன்புக்குரிய நண்பர் மஹிந்த அவர்களே! வெல்லப்போவது நானே: பொலன்னறுவையிலிருந்தே ஆட்சி செய்வேன்”
பொலன்னறுவை: பொலன்னறுவையிலிருந்து நாட்டை ஆட்சி செய்யப் போவதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இளைஞர் கூட்டமொன்றில் நேற்று பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஜனவரி மாதம் 9ம் திகதி நிச்சயமாக நான்தான் இந்த நாட்டின் ஜனாதிபதி.
-
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கருத்தரங்கு
OBAKZ தோஹா: கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கட்டார் கிளையின் ஏற்பாட்டில், “Don’t stand in line… Jump-start your career” எனும் தலைப்பில் கருத்தரங்கு ஒன்று, எதிர்வரும் 12.12.2014 அன்று மாலை 6.30 – 8.00 வரை Execuetrain , Qatar இல் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
காத்தான்குடியில் PMGGயின் சூறாசபை உறுப்பினர் தாக்கப்பட்டார்!
PMGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: துண்டுப் பிரசுர விநியோகத்தில் ஈடுபட்டிருந்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் (PMGG) சூறாசபை உறுப்பினர் ஒருவர் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் நெருங்கிய ஆதரவாளர் ஒருவரினால் நேற்று (05.12.2014) தாக்கப்பட்டுள்ளார்.
-
“பிள்ளைகள் இல்லாத எனக்கு சொத்து எதற்கு”?: ரணில்
கொழும்பு: எனக்கு பிள்ளைகள் இல்லை. எனக்கென்று குடும்பம் இல்லை. நான் உழைத்து கொடுப்பதற்கும் எவரும் இல்லை. எனது நோக்கம் நாட்டின் செல்வமான இளைஞர்களுக்கு நல்லதொரு எதிர்க்காலத்தை ஏற்படுத்துவதாகும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கமைய 5 வருடத்தில் 16 இலட்சம் தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுப்பேன் என ரணில் விக்கிரம சிங்க சூளுரைத்தார்.
-
“மகிந்த ராஜபக்ஸ ஆட்சியிலேதான் கல்வி வளர்ச்சி பாரிய வளர்ச்சி கண்டுள்ளது”
– எம்.எச்.எம். அன்வர் மட்டக்களப்பு: “மகிந்த ராஜபக்ஸ ஆட்சியிலேதான் கல்வி வளர்ச்சி பாரிய வளர்ச்சி கண்டுள்ளது” இவ்வாறு மீள்குடியேற்ற பிரதியமைச்சர் வினாயகமூரத்தி முரளிதரன் தெரிவித்தார். மட்டக்களப்பு கல்லடி கல்வி அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் க.பொ.த(சா/த),க.பொ.த(உ/த) மற்றும் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் முதல் இரு இடங்களை வலய ரீதியாகப்பெற்று சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வின்போதே இவ்வாறு தெரிவித்தார்.
-
“மாற்றத்திற்கான எங்கள் தெரிவு மைத்திரி” என்னும் தொனிப்பொருளில் காத்தான்குடியில் NFGGயின் முதலாவது பிரச்சாரக் கூட்டம்
– NFGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: “மாற்றத்திற்கான எங்கள் தெரிவு மைத்திரி” என்னும் தொனிப்பொருளில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆதரித்து காத்தான்குடியில் முதலாவது பிரச்சாரக் கூட்டம் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) ஏற்பாட்டில் நேற்று இடம்பெற்றது.
-
‘தேசிய அரசாங்கமே சிறுபான்மையினர் பிரச்சினையை ஆராயும்’: மைத்திரிபால
கொழும்பு: “ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் அமைக்கப்படும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய அரசாங்கம் ஒன்றே சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து ஆராயும்” என்று எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். “இலங்கையில் போர் முடிவுக்கு வந்துவிட்டாலும், தமிழர்களின் பிரச்சினை இன்னமும் தீரவில்லை என்றும் அதேவேளை முஸ்லிம்களும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ள”தாகவும் கூறியுள்ளார்.