-டீன் பைரூஸ்-
மட்டக்களப்பு; மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்தில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்தல் மற்றும் மாணவர்களுக்கான தளர்பாடங்கள் கையளிக்கும் நிகழ்வுகள் (06.12.2014 வெள்ளிக்கிழமை) பாடசாலை அதிபர் ஜனாப் MLM கான் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம் பெற்றது. நிகழ்விக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் கௌரவ அல்ஹாஜ் MF முகம்மது சிப்லி Eng கலந்து கொண்டார்.
மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்தின் வரலாற்றில் முதல் முறையாக புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை தேடித் கொடுத்த மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வில் பிரதேச கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் MACM பதுர்தீன்( DEO) அல்ஹாஜ் ALMசரீப் ( ADE-Non Pormal) அல்ஹாஜ் IM இப்றாஹீம்(ADE-Primary) உட்பட கல்வி அதிகாரிகள், அதிபர்கள்,ஆசிரியர்கள்,பள்ளிவாயல்கள் நிர்வாக சபை உறுப்பினர்கள்,உலமாக்கள்,பாடசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்கள், பெற்றோர்கள்,மாணவர்கள், பொது மக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ அல்ஹாஜ்MF முகம்மது சிப்லி அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 50000/= பெறுமதியான தளர்பாடங்கள் அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வும் இடம் பெற்றதுடன் வித்தியாலயத்தில் மாணவர்கள் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைய பல்வேறு வழிகளிலும் சேவை செய்த பாடசாலை ஆசிரியை ஜனாபா FM சமீம் அவர்களும் அதிதிகளால் பாராட்ட பட்டதுடன் கிராம அபிவிருத்தி சங்கம்,பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்களின் ஏற்பாட்டினில் சுமார் 8000/= பெறுமதியான அலுமாரி ஒன்று பரிசாக வழங்கப்பட்டு ஜனாபா FM சமீம் கௌரவிக்கப்பட்டார் என்பதும் விசேட அம்சமாகும்.
Published by













Leave a comment