மட்டு-மாவட்டத்தில் 30 பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சலுகை அடிப்படையில் மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்வு

police– பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு சலுகை அடிப்படையில் வரி இல்லாமல் 50000 ரூபாய் பெறுமதிக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்படும் என கடந்த வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 பொலிஸ் நிலையங்களிலுமுள்ள சுமார் 30 பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சலுகை அடிப்படையில் மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்வு 06-12-2014 நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலத்தில் இடம்பெற்றது.

மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி. உபுல் ஜெயசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரத்ன கலந்து கொண்டார்.

இதன் போது மட்டு- அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரத்ன உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகளினால் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 30 பேருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கி வைக்கப்பட்டது.

police

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 பிராந்தியத்திற்கும் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களான அனுருத்த பண்டார ஹக்மன,ஜெயந்தரத்நாயக்க,ஆர்.இஹலவத்த, தசநாயக்க உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த சலுகை அடிப்படையிலான மோட்டார் சைக்கிளை பெறுவதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 பொலிஸ் நிலையங்களிலும் இருந்து சுமார் 1821 பொலிஸ் உத்தியோகத்தர்கள் விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

bike

Published by

Leave a comment