“எனது அன்புக்குரிய நண்பர் மஹிந்த அவர்களே! வெல்லப்போவது நானே: பொலன்னறுவையிலிருந்தே ஆட்சி செய்வேன்”

maithiripaala unpபொலன்னறுவை: பொலன்னறுவையிலிருந்து நாட்டை ஆட்சி செய்யப் போவதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இளைஞர் கூட்டமொன்றில் நேற்று பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஜனவரி மாதம் 9ம் திகதி நிச்சயமாக நான்தான் இந்த நாட்டின் ஜனாதிபதி.

பொலனறுவை இளைஞர்களை ஜனாதிபதி வேட்பாளராக சந்திக்க முடியும் என நான் கனவிலும் நினைத்ததில்லை. நிச்சயமாக வெற்றியீட்டும் ஜனாதிபதி வேட்பாளராக உரையாற்ற கிடைக்கும் என நினைத்ததில்லை. இருவாரங்களுக்குள் இலங்கையின் அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

எனது அருமை நண்பர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களே இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றியீட்டுவேன். வெற்றியீட்டக்கூடிய வேட்பாளர் ஒருவர் உங்கள் முன்னிலையில் இருக்கின்றார். சிறந்த தோல்வியாளர் யார் என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும். அதனை பற்றி பேச விரும்பவில்லை என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment