கொழும்பு: ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசியப்ப ட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர் அலி ஏற்றுக் கொண்டுள்ளார். கடந்த வாரம் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ஏ.எச்.எம். அஸ்வர் இராஜினாமா செய்திருந்தார். அவரது இடத்து க்கு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர் அலியை நியமிக்க அரசு முடிவு செய்திருந்தது.
ஆனால் அவர் அந்தப் பதவியை முன்னதாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் தற்போது அமைச்சர் ரிதாத் பதியுதீன், தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அதை சரியென்று ஏற்றுக் கொண்டுள்ளது என்றும் இதன்படி அமீர் அலி பாராளுமன்ற உறுப்பினராகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Published by

Leave a comment